Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 176)

மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்

தோஷநிவ்ருத்திதானே தோஷமாமிறே.

– இப்படிச் சொல்லுகைக்கு தோஷ நிவ்ருத்தியில் வரும் தோஷமேதென்ன; வேறொரு தோஷமும் வேண்டா, இதுதானே தோஷமா மென்கிறார் (தோஷ) இத்யாதியாலே.

இவ்விதம் கூறுவதற்கு சரீர்த்தின் தொடர்பை நீக்கிக்கொள்வதில் உண்டாகும் வ்ருப்பம் எனப்தன் மூலம் எண்ண குற்றம் ஏற்படுகிறது என்ற கேள்வி கேட்கலாம். இதற்கு விடை அளிக்கிரார்- வேரு தனியாக குற்றமே அவசியம் இல்லை, சரீரத்தை நீக்கிக்கொள்வதில் ஏற்படும் விருப்பமே குற்ற்மாகிரது- என்கிறார்

– அதாவது, காமிநியானவள் தன்னுடம்பி லழுக்குக் கழற்றி போகத்திலே யந்வயிக்க இச்சிக்குமாப்போலே, ஸ்வத: பரிசுத்தமான வாத்ம ஸ்வரூபத்துக்கு வந்தேறியான தோஷத்தைக் கழித்து ஸ்வசேஷிக்கு போக்யமாக விநியோகப்பட வேணும் என்று ஸ்வநிர்ப்பந்தத்தாலே இவன் பண்ணுவித்துக் கொள்ளுகிற தோஷநிவ்ருத்திதானே, காமிநியுடைய வழுக்குகக்கும் காமுகனைப்போலே தோஷமே யபிமதமாய் இத்தோடே தன்னை புஜிக்க வாதரிக்கிற வவனுடைய போகத்துக்கு விலக்காகையாலே தோஷமாமிறே யென்கை. அவனுக்கு அநிஷ்டமாமதிறே தோஷமாவது. (இறே) என்று ப்ரஸித்தி தோற்ற வருளிச்செய்தது கீழுபபாதித்தத்தையெல்லாம் நினைத்து.

காமத்தில் விருப்பம் கொண்ட ஒரு பெண் தனது உடலில் உள்ள அழுக்குகளை அகற்றி, தன்னைத் தூய்மைப்படுத்திக்கொண்டு, இன்பம் அனுபவிக்க எண்ணுவது போன்று - இயற்கையாகவே தூய்மையாக உள்ள ஆத்மாவிற்கு இடையில் வந்து சேர்ந்த தோஷம் போன்றதான இந்தச் சரீரத்தைக் கழித்துவிட்டு, தன்னுடைய எஜமானனாக உள்ள ஸர்வேச்வரனுக்கு, தனது ஆத்மா தோஷங்கள் அற்றதான இன்பமான வஸ்துவாகக் கிட்டவேண்டும் என்று சேதநன் எண்ணுகிறான். ஆனால், தான் விரும்பிய பெண்ணின் உடல் அழுக்கை விரும்பும் காதலன் போன்று, தோஷம் என்பதே தனக்குப் பிடித்த விஷயமாகக் கொண்டு இந்தச் சரீரத்துடன் சேதநனை அனுபவிக்க எண்ணும் ஈச்வரனின் அனுபவித்திற்கு இந்தச் சரீர தொடர்பை நீக்கவேண்டும் என்பதான விருப்பம் தடையாக உள்ளது அல்லவோ? ஆகவே இது குற்றமே ஆகிறது. தோஷம் என்றால் ஸர்வேச்வரனுக்கு விருப்பம் அற்றது அல்லவோ? ”இறே” என்று முடித்தது ஏன் என்றால் இதுவரை கூறப்பட்டது அனைத்தையும் தனது திருவுள்ளத்தில் இப்போது மீண்டும் ஒருமுறை எண்ணியதால் ஆகும்.