Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 174)
மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்
ப்ராப்யப்ரீதி விஷயத்வத்தாலும் க்ருதஜ்ஞதையாலும் பின்பவை அபிமதங்களாயிருக்கும்.
– இப்படியிவனர்த்தித்தாலும், ஸாத்யம் ஸித்தித்த பின்பு அவனுக்கவை அபிமதங்களா யிருக்குமோ வென்ன வருளிச்செய்கிறார் (ப்ராப்ய) இத்யாதியாலே.
– இப்படியாக ஞானி அவனிடம் வேண்டிக் கொள்கின்றபோதிலும், ஸர்வேச்வரனுக்குத் தேவையான பலன் அவனுக்குக் கிட்டிய பின்னர், திவ்யதேசங்கள் அவனுக்கு இன்னமும் விரும்புவதற்கு ஏற்றபடி இருக்குமோ என்ற சந்தேகத்திற்கான விடையை அருளிச்செய்கிறர்.
(ப்ராப்யப்ரீதி விஷயத்வமாவது) – தனக்கு ப்ராப்யபூதனான விச்சேதநனுடைய வுகப்புக்கு விஷயமாயிருக்கை; “கண்டியூரரங்கம் மெய்யம் கச்சி பேர்மல்லை” யென்று மண்டியிரே யிவனிருப்பது. க்ருதஜ்ஞதையாவது – இவ்வோ தேசவாஸத்தாலேயன்றோ நாமிவனைப்பெற்றது என்று அத்தேசம் தனக்குப் பண்ணின வுபகாரத்தை யநுஸந்திக்கை. இவையிரண்டாலும், ஸாத்யமான விச்சேதநன் கைபுகுந்திருக்கச் செய்தேயும். அவனுக்கு அவ்வோ தேசங்கள் அபிமதங்களா யிருக்கும் மென்கை. ஆக, (குணம் போலே தோஷநிவ்ருத்தி) என்று கீழ்ச்சொன்ன சேஷத்வ பாரதந்த்ர்யரூப ஆத்மகுணம் போலே தோஷ நிவ்ருத்தியும், (பராநுபவத்துக்கு விலக்கு) என்று ப்ரதிஜ்ஞை பண்ணி ததுபபாதநார்த்தமாக அபிமதவிஷயத்தில் அழுக்கபிமதமா யிருக்கும்படியையும், இவன் ”அழுக்குடம்பு” என்று கழிக்கிறவிதிலே யவனத்யாதரத்தைப் பண்ணும்படியையும், ஜ்ஞாநியான விவனை ஸவிக்ரஹமாக வாதரிக்கைக்கு ஹேதுவிசேஷத்தையும், பரமார்த்தனான விவன் தேஹ ஸ்திதி கொண்டே இவன் தேஹத்திலவன் விருப்பமறியலா மென்னுமத்தையும், அவனிவனுடைய தேஹத்தை விருப்பும் ப்ரகாரத்தையும், ஸாத்யமானது விது ஸித்தித்தால் ஸாதநாதரம் மட்டமாம்படியையும், அதினெல்லையையும், இவன் அவ்வோதேசங்களைக் கைவிடாதொழியவேணும் என்று அர்த்தித்தால் ஸ்வஸாத்யம் ஸித்தித்திருக்கச் செய்தேயும் ஹேது த்வயத்தாலே அவனுக்கவை அபிமதங்களா யிருக்கும் படியையு மருளிச் செய்தாராயிற்று.
“ப்ராப்யப்ரீதி விஷயத்வமாவது” என்பது என்ன? ஸர்வேச்வரனாகிய தன்னை அடையத்தகுந்தவனாக உள்ள சேதனன் ஒருவனுடைய மகிழ்ச்சிக்குக் காரணமாக தான் இருத்தல் என்பதாகும். திருக்குறுந்தாண்டகம் (19) - கண்டியூரரங்கம் மெய்யம் கச்சி பேர்மல்லை – என்று திவ்யதேசங்களின் மீது மிகுந்த ஈடுபாடும் மகிழ்வும் கொண்டபடி அல்லவோ சேதநன் உள்ளான்? “க்ருதஜ்ஞதை” என்றால் – ஸர்வேச்வரன் தனது திருவுள்ளத்தில், “இந்தத் திவ்யதேசங்களில் நாம் வசித்த காரணத்தால் அல்லவோ இந்தச் சேதநன் அங்கு வந்தன், இதனால் அல்லவோ நாம் அவனைப் பெற்றோம்”, என்று அந்த திவ்யதேசம் ஸர்வேச்வரனாகிய தனக்குச் செய்த உபகாரத்தை எண்ணிப்பார்ப்பதாகும். இந்த இரண்டு காரணங்களாலும், தன்னுடைய முயற்சிக்குப் பலனாக சேதநனை அடைந்துவிட்டபோதிலும், ஸர்வேச்வரனுக்கு அந்த திவ்யதேசங்கள் விரும்பத் தகுந்தவையாகவே இருக்கும் என்று கருத்து. ஆகவே சூர்ணை 146ல் (குணம் போலே தோஷநிவ்ருத்தி) கூறப்பட்டதான சேஷத்வம் மற்றும் பாரதந்த்ர்யம் என்னும் ஆத்மகுணங்கள் போன்று சரீரத்தின் தொடர்பை விலக்க எண்ணுதல் என்பது சூர்ணை 164ல் (பராநுபவத்துக்கு விலக்கு) கூறப்பட்டதான பகவத் அனுபவத்திற்கு விலக்காக உள்ளது என்று எடுத்துக்கூறினார். இதனை விளக்கும்விதமாக கீழே உள்ள பலவற்றையும் அருளிச்செய்தார்: தான் விரும்பும் பெண் ஒருவளிடம் உள்ள அழுக்கு என்பது விரும்பத்தக்கதாக உள்ள நிலையையும் சேதநன் ஒருவன் தன்னுடைய சரீரமானது “அழுக்குடம்பு” என்று எண்ணியபடி சரீரத்தைக் கைவிட உள்ளபோது, ஈச்வரன் அதனை விரும்புகிற நிலையையும் ஞானியாக உள்ள சேதநன் ஒருவனை அவனது சரீரத்துடன் ஈச்வரன் விரும்புவதற்கான காரணத்தையும் தான் எடுத்துள்ள சரீரத்தின் மீது வெறுப்பு கொண்டுள்ள ஒருவனது சரீரமானது இந்த உலகில் இருக்கின்ற நிலை மூலமாக அந்தச் சரீரத்தின் மீது ஈச்வரன் எந்த அளவு விருப்பம் கொண்டுள்ளான் என்பதை அறியலாம் என்பதையும் ஈச்வரன் சேதனன் ஒருவனின் சரீரத்தை எவ்விதம் விரும்புகிறான் என்பதையும் ஈச்வரனாகிய தான் பெற்ற பலனாக எண்ணுகின்ற சேதனனின் சரீரம் கிட்டினால், தான் இந்த சேதநனை அடைவதற்கு உபாயமாக இருந்த திவ்யதேசங்கள் மீது ஈச்வரனுக்கு ஆசை சற்றே குறைவதையும் இவ்விதம் அந்த திவ்யதேசங்களைக் கைவிடாமல் இருக்கவேண்டும் என்று சேதநன் வேண்டினால், தனது பயன் கிட்டியபோதிலும் ஈச்வரன் அந்த திவ்யதேசங்களை விடாமல் இருப்பதற்கான இரண்டு காரணங்களையும்