Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 153)
மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்
ஸ்வரூபஸித்தியுமத்தாலே.
இவ்வளவேயன்று, இன்னமுமிதுக்கொரு ப்ரயோஜநமுண் டென்கிறார் (ஸ்வரூப) இத்யாதியாலே.
இது மட்டும் அல்ல, புருஷகாரத்தினால் மேலும் ஒரு பயன் உள்ளது என்கிறார்.
ஸ்வரூபமாவது இவனுக்கு ததீய பாரதந்த்ர்யம்; அவனுக்கு ஆச்ரித பாரதந்த்ர்யம்; “தேவுந் தன்னையும்” என்று ஆச்ரித பாரதந்த்ர்யத்தையிறே யவனுக்கு தானான தன்மையாகவாழ்வாரருளிசெய்தது. இவையிரண்டு மிருவர்க்கும் ஸித்திப்பது புருஷகார புரஸ்கரணத்தாலே என்கை.
ஸ்வரூபம் என்பது என்ன? சேதனனைப் பொறுத்தவரையில் ஸர்வேச்வரனின் உடைமையாக உள்ள பிராட்டிக்குக் கீழ்ப்படிந்து இருத்தல் (ததீய பாரதந்த்ர்யம்); ஸர்வேச்வரனைப் பொறுத்தவரையில், தன்னைப் பற்றி நிற்கும் பிராட்டிக்கு வசப்பட்டிருத்தல் (ஆச்ரித பாரதந்த்ர்யம்) என்பதாகும். திருவாய்மொழி (2-7-4) – தேவுந் தன்னையும் - என்ற பாசுரத்தின் மூலம் ஆச்ரித பாரதந்த்ர்யம் என்பதையே ஸர்வேச்வரனின் ஸ்வரூபமாக ஆழ்வார் உரைத்தது காண்க. சேதனன் ஸர்வேச்வரனை அண்டும்போது ஸர்வேச்வரனுக்கு ஆச்ரித பாரதந்த்ர்யம் வெளிப்படுவது என்பது புருஷகாரத்தினால் ஆகும்.