Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 150)
மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்
அபேக்ஷா நிரபேக்ஷமாகத் திருவடிக்கும் ஸ்ரீகுஹப்பெருமாளுக்கும் இது உண்டாயிற்று.
இத்தலையிலபேக்ஷையின்றிக்கேயிருக்க இவ்விஷயீகாரம் ஸித்திக்கப் பெற்றவர்களுண்டோவென்ன வருளிச்செய்கிறார் (அபேக்ஷாநிரபேக்ஷமாக) என்று தொடங்கி.
– ஸர்வேச்வரனிடம் தானாகவே வராமல், இப்படிப்பட்ட “ஸ்வாதந்த்ர்யம் காரணமான பாரதந்த்ர்யம்” என்பது கைகூடப்பெற்றவர்கள் யாரேனும் உண்டா என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.
– அதாவது, தந்தாம்பக்கல் அபேக்ஷையின்றிக்கேயிருக்கச்செய்தே, பம்பா தீரத்திலும் கங்காகூலத்திலும் பெருமாள் தாமே சென்றங்கீகரிக்கப் பெற்ற திருவடிக்கும் ஸ்ரீகுஹப்பெருமாளுக்கும் இந்த பரகதஸ்வீகாரா முண்டாய்த்தென்கை.
தன்னிடம் விருப்பம் இல்லாமல் உள்ளபோதிலும், பம்பை நதியின் கரையிலும், கங்கையின் கரையிலும் இராமன் தானாகவே சென்று ஏற்றுக்கொண்ட அனுமன் மற்றும் குஹன் ஆகிய இருவருக்கும் இந்தப் பரகதஸ்வீகாரம் (ஸ்வாதந்த்ர்யம் காரணமான பாரதந்த்ர்யம்) உண்டானது.