Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 136)

மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்

பூர்ணவிஷயமாகையாலே பெருமைக்கீடாகப் பச்சையிடவொண்ணாது.

இப்படி உபாயமவனென்றத்யவஸித்து ஸ்வப்ரவ்ருத்தியில் நிவ்ருத்தனாயிருந்துவிட வமையுமோ, தத்ஸந்தோஷார்த்தமாக விவன் சில பச்சையிட வேண்டாவோவென்ன வருளிச்செய்கிறார் (பூர்ணவிஷயம்) என்று தொடங்கி.

– இப்படியாக அவனே உபாயம் என்று உறுதியாக எண்ணியபடி, நாம் செய்யவேண்டிய செயல்களைச் செய்யாமல் இருப்பது சரியா? நமக்கு மோக்ஷம் அளிப்பதன் காரணமாக அவன் மகிழ்வு கொள்வதற்காகவாவது ஒரு சில உபகாரங்களைக் கைக்கொள்ளவேண்டாமோ? இவற்றுக்கு விடை அருளிச்செய்கிறார்.

– அதாவது, லோகத்தில் பச்சையிடுவார் அவ்வோவிஷயங்களின் தரத்துக் கீடாகவிறேயிடுவது, இங்கும் பச்சையிடப் பார்க்கிலப்படியிடவேணுமிறே; அவன் அவாப்தஸமஸ்தகாமதயா பரிபூர்ணனாயிருக்குமவனாகையாலே, அவனுடைய வைபவத்துக் கநுகுணமாக விவனாலொரு பச்சையிடப்போகா தென்கை.

இந்த உலகில் உபகாரம் செய்பவர்கள், தாங்கள் பெற்ற உபகாரத்தின் அளவிற்கு ஈடாக மட்டுமே ப்ரதிஉபகாரம் செய்வார்கள். இங்கு மோக்ஷம் அளிப்பதற்காக ப்ரதிஉபகாரம் செய்யவேண்டும் என்றால் ஸர்வேச்வரனின் தகுதிக்கு ஏற்பவும், அவன் செய்யும் உபகாரத்திற்கு ஏற்பவும் செய்யவேண்டும். ஆனால் அவனோ அனைத்தும் பூர்ணமாக நிரம்பி உள்ளவன் ஆவான். எனவே அவனது மேன்மைக்கு ஏற்றபடி நம்மால் ஒரு பொருளையும் அவனுக்கு அளிக்கஇயலாது என்று அறியவேண்டும்.