Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 119)
மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்
“நெறிகாட்டி தீக்குதியோ” என்னாநின்றதிறே.
ததபாயத்வத்தை ஜ்ஞாநிநாமக்ரேஸரரானவாழ்வார் பாசுரத்தாலே தர்சிப்பிக்கிறார் (நெறிகாட்டி) என்று தொடங்கி.
இப்படிப்பட்ட அபாயத்தன்மை என்பது மற்ற உபாயங்களுக்கு உள்ளது என்பதை ஞானிகளில் முதல்வரான நம்மாழ்வார் தனது பாசுரத்தில் கூறுவதை உணர்த்துகிறார்.
அதாவது உன்னையொழிய வேறோருபாயத்தை காட்டி உன்பக்கலினின்றும் அகற்றப் பார்க்கிறாயோவென்கையாலே, ப்ராபகாந்தராபாயத்வம் ஸித்தமிறே என்கை. நீக்குகையாவது - பரதந்த்ரமான வஸ்துவை ஸ்வதந்த்ரக்ருத்யமான உபாயாநுஷ்ட்டாநத்திலே மூட்டித் தனக்கு அசலாக்குகையிறே.
பெரிய திருவந்தாதி (6) - நெறிகாட்டி நீக்குதியோ – என்ற பாசுரம் காண்க. இதில் ஆழ்வார், “மற்ற உபாயங்களைக் காண்பித்து உன்னை விட்டு என்னை அகற்றப் பார்க்கிறாய் போலும்” என்கிறார். இதன் மூலம் மற்ற உபாயங்களின் அபாயத்தன்மை தெளிவு அல்லவோ? இங்கு பாசுரத்தில் உள்ள “நீக்குதல்” என்றால் என்ன? அவனுக்கு மட்டும் வசப்பட்டதான ஆத்மாவைத் தனது முயற்சியால் சேதனன் காப்பாற்றிக்கொள்ள மற்ற உபாயங்களை நாடும்படிச் செய்து, அதன் மூலம் விலக்கிவைத்தல் ஆகும்.