Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 118)

மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்

அபாயமாயிற்றது ஸ்வரூபநாசகமாகையாலே.

இவர்களுக்கு அபாயமாவானென்னென்ன (அபாயமாய்த்தது ஸ்வரூபநாசக மாகையாலே) என்கிறார்.

– ஞானிகளுக்கு மற்ற உபாயங்கள் ஏன் அபாயமாக இருக்கும் என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.

ஸ்வரூபமாவது அத்யந்த பாரதந்த்ர்யம்; இதுக்கு ஸ்வயத்நரூபமானவது நாசகமிறே.

– ஸ்வரூபம் என்றால் எம்பெருமானிடம் மிகுந்த ப்ரேமை காரணமாக அவனுக்கு மட்டுமே வசப்பட்டு இருத்தல் ஆகும். மற்ற உபாயங்கள் இப்படிப்பட்ட நிலையை மாற்றிவிடுவதால், அவை ஸ்வரூபத்திற்கு அழிவை ஏற்படுத்தக்கூடியவை ஆகும்.