Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 117)

மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்

ஜ்ஞாநிகளுக்கு அபாயம்.

– ஆனால், ஜ்ஞாநிகளுக்கு இது எங்ஙனேயென்ன (ஜ்ஞாநிகளுக்கபாயம்) என்கிறார்.

இது போன்ற உபாயங்கள் ஞானிகளுக்கு எவ்விதம் இருக்கும் என்பதற்கு விடை அருளிச்செய்கிறார்.

அதாவது ஸ்வரூப யாதாத்ம்ய ஜ்ஞாநமுடையவர்களுக்கு அபாயமாயிருக்குமென்கை.

ஆத்மாவின் ஸ்வரூபம் இன்னது என்ற ஞானம் கொண்டவர்க்கு இது போன்ற மற்ற உபாயங்கள் அனைத்தும் அபாயமாகவே (ஆபத்து ஏற்படுத்துவதாக) இருக்கும்.