Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 114)

மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்

அந்த ஸத்தை ப்ராவண்ய கார்யமான அநுபவமில்லாதபோது குலையும்; அது குலையாமைக்காக வருமவையெல்லாம் அவர்ஜநீயங்களுமாய் ப்ராப்தங்களுமாயிருக்கும்; ஆகையாலே பகவத் விஷயப்ரவ்ருத்தி சேரும்.

– இத்தால் கீழ்ப் பண்ணின சங்கைக்குப் பரிஹாரமானதேதென்னவருளிச் செய்கிறார் மேல் வாக்யத்ரயத்தாலே.

– மேலே எழுப்பப்பட்ட கேள்விக்கு இங்கு விடை அருளிச்செய்கிறார்.

(அந்த ஸத்தை ப்ராவண்ய கார்யமான வநுபவமில்லாதபோது குலையும்) என்றது - அப்படிப்பட்ட ஸத்தைதான், ஸ்வப்ரயுக்த ஸம்பந்தமடியாய் வருகிற ப்ராவண்ய கார்யமான பகவதநுபவமில்லாதபோது க்ஷணகாலமும் நில்லாதென்றபடி. (அது குலையாமைக்காக வருமவை யெல்லாம் அவர்ஜநீயங்களுமாய் ப்ராப்தங்களுமாயிருக்கும்) என்றது - அந்த ஸத்தையழியாமைக்குறுப்பாக வருகிற மடலெடுக்கை முதலான ஸகல ப்ரவ்ருத்திகளும், பகவதநுபவமொழியத் தரிப்பில்லாமையாலே தவிருவோமென்றாலும் தவிரப்போகாதவையுமாய், எல்லாம் சேஷிக்கதிசய கரங்களாகையாலே ஸ்வரூப ப்ராப்தங்களுமா யிருக்குமென்றபடி. (ஆகையாலே பகவத் விஷயப்ரவ்ருத்தி சேரும்) என்று – உக்தத்தை ஹேதுவாக்கிக் கொண்டு ப்ரக்ருத சங்கையைப் பரிஹரித்துத் தலைக்கட்டுகிறார்.

“அந்த ஸத்தை ப்ராவண்ய கார்யமான வநுபவமில்லாதபோது குலையும்” என்றால் - ஆத்மாவின் இருப்பு என்பது: தான் உள்ளதற்குக் காரணமாக இருக்கின்ற எஜமான-அடிமை என்ற தொடர்பு மூலமாக ஏற்படும் மிகுந்த அன்புக்கு இலக்கான எம்பெருமானின் அனுபவம் கிட்டாதபோது ஒரு நொடி கூடத் தாங்க இயலாது என்பதாகும். “அது குலையாமைக்காக வருமவை யெல்லாம் அவர்ஜநீயங்களுமாய் ப்ராப்தங்களுமாயிருக்கும்” என்றால் - ஆத்மாவின் இருப்பு அழியாமல் இருக்கவேண்டும் என்பதன் பொருட்டு மடல் எடுத்தல் போன்ற செயல்களில் ஈடுபடக்கூடும்; இது போன்ற செயல்களை, எம்பெருமானின் அனுபவம் கிட்டாமல் தரிக்கமுடியாது என்பதால் செய்யக்கூடாது என்று எண்ணினலுல் இயலாதபடி இருக்கும்; இப்படியாக இவை எம்பெருமானின் தன்மை குறித்து மற்றவர்களை வியக்கவைக்கும்படிச் செய்வதால், இவை சேதனனின் ஸ்வரூபம் (இயற்கை) ஆகும். எனவே “ஆகையாலே பகவத் விஷயப்ரவ்ருத்தி சேரும்” என்று மேலே எழுப்பப்பட்ட சந்தேகத்தை நிவர்த்தி செய்து முடிக்கிறார்.