Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 108)
மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்
பகவத் விஷயத்திலிழிகிறதும் குணங்கண்டன்று; ஸ்வரூப ப்ராப்தமென்று.
– ”மாற்பால் மனஞ் சுழிப்ப” இத்யாதிப்படியே ப்ராவண்ய விஷயமாகச் சொன்ன பகவத் விஷயத்தில் குணங்கண்டிழிகிறவோபாதி, இதுவும் தோஷங்கண்டே விடுகிறதானாலோவென்ன (பகவத் விஷயத்திலிழிகிறதும் குணங்கண்டன்று; ஸ்வரூப ப்ராப்தமென்று) என்கிறார்.
– “மாற்பால் மனஞ் சுழிப்ப” என்னும் சூர்ணை 95-ல் கூறப்பட்டபடி நமது அன்புக்கு இலக்காக உள்ள ஸர்வேச்வரனின் குணங்களில் ஈடுபாடு கொள்வதால் அவனிடம் செல்கிறோம் என்று கூறுவது போன்று, சரீரத்தில் உள்ள பல்வேறு தோஷங்களைக் கண்டதால் மட்டுமே நமக்கு விஷயங்கள் மீது வெறுப்பு உண்டாகிறது என்று கூறினால் என்ன என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.