Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 106)
மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்
அது ப்ரதானஹேதுவன்று.
ஆனால் அதுவோ பின்னை அருசிஹேதுவென்ன அருளிச்செய்கிறார் (அது) இத்யாதியால்.
ஆனால் இப்படிப்பட்ட தோஷதர்சநம் என்பதுதான் மற்ற விஷயங்களின் மீது வெறுப்பு உண்டாக முக்கியமான காரணமா என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.
(ப்ரதாந ஹேதுவன்று) என்றது, அதுவுமொரு ஹேது, முக்க்ய ஹேதுவன்றென்றபடி.
“ப்ரதான ஹேதுவன்று” என்பதன் மூலம் அதுவும் ஒரு காரணமாக உள்ளதே அன்றி, முக்கியமான காரணம் அல்ல என்றார்.