Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 100)

மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்

மூவரிலும் வைத்துக்கொண்டு மிகவும் வேண்டுவது ப்ரபந்நனுக்கு.

இப்படி யதிகாரி த்ரயத்துக்கு மபேக்ஷிதமேயாகிலும், அதிகமாக வேண்டுவது ப்ரபந்நனுக்கென்கிறார் (மூவரிலும்) என்று தொடங்கி.

– சமம் மற்றும் தமம் ஆகிய இரண்டும் மேலே உள்ள சூர்ணையில் கூறியபடி மூன்றுவிதமான மனிதர்களுக்கும் அவசியம் என்றாலும், ப்ரபந்நன் ஒருவனுக்கு மிகவும் அதிகமாக இவை இருக்கவேண்டும் என்கிறார்.

இவனுக்கிதிலாதிக்யம் சொல்லுகைக்காகவிறே அல்லாதவர்களை யிவ்விடத்தில் ப்ரஸங்கித்ததும்.

ப்ரபந்நன் ஒருவனுக்கு இவை இரண்டும் மிகவும் அதிகமாக இருத்தல் வேண்டும் என்று உணர்த்துவதற்காகவே, ப்ரபந்நன் அல்லாதவர்களைக் குறித்தும் இங்கு இவர் அருளிச்செய்தார்.