Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 98)

மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்

ப்ராப்யலாபம் ப்ராபகத்தாலே; ப்ராபகலாபம் திருமந்த்ரத்தாலே; திருமந்த்ரலாபம் ஆசார்யனாலே; ஆசார்யலாபம் ஆத்மகுணத்தாலே.

இப்படி சமதமங்களுண்டாகவே உத்தரோத்தர மிவையெல்லாம் ஸித்திக்கும் ப்ரகாரத்தை ஆரோஹ க்ரமத்தாலே அருளிச்செய்து, இதில் யாதொன்றுக்கு யாதொன்று ஹேதுவாகச் சொல்லிற்று ஆக நியதமென்னுமிடத்தை அவரோஹ க்ரமத்தாலே யருளிச் செய்கிறார் (ப்ராப்ய லாபம்) இத்யாதியாலே.

இப்படியாகச் சமம் மற்றும் தமம் ஆகியவை உண்டாக, மேன்மேலும் இவை அனைத்தும் கிடைக்கின்ற வழியை ஆரோஹமாக உரைக்கிறார் (முதலில் காரணம் கூறி பின்னர் காரியம் உரைத்தல்). அதன் பின்னர் எதற்கு எது காரணமாக உரைக்கப்பட்டதோ அது எப்போதும் பொருந்துவதாகும் என்பதை அவரோஹமாக உரைக்கிறார் (காரியம் கூறி பின்னர் காரணம் உரைத்தல்).

இது தனக்கு ப்ரயோஜநம், இது ஹேதுபரம்பரையில் ப்ரதமஹேது சமதமங்களாகையாலே, அவச்யமிவை யிரண்டு மிவனுக்குண்டாகவேணு மென்கை. ஈச்வரனே ப்ராபகனாகையாலே, ப்ராப்யலாப மீச்வரனாலே என்கிற ன்தாநத்திலே (ப்ராபகத்தாலே) என்றருளிச்செய்தது.

– இவ்விதம் உரைக்கப்பட்டதன் பலன், இந்தக் காரண வரிசையில் முதலில் உரைக்கப்பட்டவை காரணமான சமம் மற்றும் தமம் என்பதால், அவை முதலில் இவனுக்கு உண்டாகவேண்டும். ஈச்வரனே உபாயம் என்பதால் ”ப்ராப்யலாபம் ஈச்வரனாலே” என்பதற்குப் பதிலாக “ப்ராப்யலாபம் ப்ராபகத்தாலே” என்று கூறியது காண்க.