Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 94)
மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்
இவனுக்குப் பிறக்குமாத்மகுணங்களெல்லாவற்றுக்கும் ப்ரதாந ஹேது இந்த ப்ராவண்யம்.
ஏவம்பூதமான ப்ராவண்யம் விஷய வைலக்ஷண்யாதீநமத்தனையன்றோ, சமதமாதி யாத்ம குணங்களன்றோ அதிகாரத்தை மினுங்குவிப்பதென்ன; அவை தன்னையு மிதுதானே யுண்டாக்கு மென்கிறார் மேல் (இவனுக்கு) என்று தொடங்கி.
இத்தகைய பகவத் விஷய ஈடுபாடு என்பது எம்பெருமானின் அழகு போன்றவற்றால் ஏற்படுவது அல்லவோ? ஆனால் சமம், தமம் போன்ற ஆத்மகுணங்களால் ஒருவன் பயன் பெறுவதால் அல்லவோ மேன்மை அடைகிறான் என்று கேட்கலாம். உண்மை, ஆயினும் அத்தகைய ஆத்மகுணங்களை இத்தகைய பகவத் ஈடுபாடு அல்லவோ ஏற்படுத்தும் என்று கூறுகிறார்.
– ”சமதம நியதாத்மா”, ”அமாநித்வம்” இத்யாதியிற் சொல்லுகிறபடியே – இச்சேதநனுக்குண்டாகத் தக்கவாத்மகுணங்கள் தானனேகமுண்டிறே; இவை யெல்லாவற்றுக்கும் இந்த ப்ராவண்யம் - (ப்ரதாந ஹேதுவாகையாவது) – அநுகூல ஸஹவாஸ சாஸ்த்ராப்யா ஸாசார்யோபதேசாதிகளான ஹேத்வந்தரங்களிற் காட்டில் முக்க்ய ஹேதுவாயிருக்கை.
இவனுக்கு ஏற்படும் ஆத்மகுணங்கள் அனைத்திற்கும் மூலகாரணம் எது என்றால், பகவத் விஷய ஈடுபாடே ஆகும். இதனை ”சமதம நியமாத்மா”, ”அமாநித்வம்” போன்ற ச்லோகங்கள் மூலம் அறியலாம். ஒருவனுக்கு ஆத்மகுணங்கள் ஏற்பட முக்கியமான காரணம் பகவத் விஷய ஈடுபாடே ஆகும்.