Sri Vachana Bhushanam - இரண்டாம் ப்ரகரணம் – உபாயம் (சூர்ணை 78)

இரண்டாம் ப்ரகரணம் – உபாயம்

க்ராமகுலாதிகளால் வரும் பேர் அநர்த்தஹேது.

அதுவென்? க்ராமகுலாதிகளால் வரும் வ்யபதேசமன்றோ நடந்து போகுகிறதென்ன வருளிச் செய்கிறார் (க்ராம) இத்யாதியால்.

– மேலே உள்ள சூர்ணையில் உள்ளபடி ஆத்மாவிற்கு “தாஸன்” என்பது மட்டுமே நிலையான பெயர் என்று எவ்விதம் கூற இயலும்? அவரவர்களின் ஊர் பெயர்கள், குலப் பெயர்கள் ஆகியவை அல்லவோ வழங்கப்படுகின்றன என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.

– அதாவது, க்ராமகுலாதி வ்யபதேசம் அஹங்கார ஜநகமாகையாலே ஸ்வரூபஹாநிரூபாநர்த்தகரமென்றபடி. ஆகையால், அவற்றாலிவன் வ்யபதேஷ்டவ்ய னல்லனென்று கருத்து

– ஊரின் பெயர்கள், குலத்தின் பெயர்கள் ஆகியவற்றால் கூறப்படும்போது ஒருவனுக்கு “நான்” என்னும் அஹங்காரம் உண்டாகிவிடும். இதனால் இவை ஸ்வரூபத்தின் அழிவு என்பதை உண்டாக்கிவிடும். எனவே அப்படிப்பட்ட பெயர்கள் மூலம் ஒருவன் அழைக்கப்பட வேண்டியவன் அல்லன் என்று கருத்து.