Sri Vachana Bhushanam - இரண்டாம் ப்ரகரணம் – உபாயம் (சூர்ணை 75)

இரண்டாம் ப்ரகரணம் – உபாயம்

ஸ்வாதந்த்ர்யமும் அந்யசேஷத்வமும் வந்தேறி.

ஆனால், வந்தேறியாக விவக்ஷிதங்களெவை என்ன? இதுக்கு விரோதி களானவையென் றருளிச்செய்கிறார் (ஸ்வாதந்த்ர்யமும்) என்று தொடங்கி.

– அடிமைத்தனம் என்பது ஆத்மாவிற்கு இயல்பானது என்றாலும், இத்தகைய தன்மை இடையில் வந்து சேர்ந்த ஒன்று எனக் கூறும்படியாகச் செய்பவை எவை என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.

ஸ்வாதந்த்ர்யமாவது நானெனக்குரியனென்றிருக்கை. அந்ய சேஷத்வ மாவது – பகவதந்ய விஷயங்களிலே தொண்டுபட்டிருக்கை. இவற்றை வந்தேறி யென்கிறது - இவனுடைய அவித்யாதிகளடியாக வந்தவையாகையாலே.

– “ஸ்வாதந்த்ரியம்” என்றால் “நான் எனக்கு உரியவன்” என்று இருத்தல் ஆகும். “அந்யசேஷத்வம்” என்றால் எம்பெருமான் நீங்கலாக உள்ள மற்ற விஷயங்களில் ஈடுபட்டிருத்தல் ஆகும். இவை இரண்டும் “வந்தேறி” என்றது - இவனது அறியாமை காரணமாக இவை ஏற்பட்டதால் ஆகும்.