Sri Vachana Bhushanam - இரண்டாம் ப்ரகரணம் – உபாயம் (சூர்ணை 68)
இரண்டாம் ப்ரகரணம் – உபாயம்
அது பலிப்பது இவன்னினைவு மாறினால்.
– ஆனால் அது இந்நாள்வரை பலியாதிருப்பானென்னென்ன வருளிச் செய்கிறார் (அது பலிப்பது இவன்னினைவு மாறினால்) என்று தொடங்கி.
– ஆயினும் அத்தகைய எம்பெருமானின் நினைவு இதுநாள் வரை பலிக்காமல் உள்ளதற்கு என்ன காரணம் என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.
– அதாவது, அவன் நினைவு இவனுக்குக் கார்யகரமாவது, இவனுடைய ஸ்வரக்ஷண சிந்தை மாறின காலத்திலென்றபடி.
எம்பெருமானின் நினைவு சேதனனுக்கு எப்போதும் பலன் அளிக்கும் என்றால் சேதனன், ”நானே என்னைப் பாதுகாத்துக்கொள்வேன்” என்று எண்ணுகின்ற சிந்தனை நீங்கும் நேரத்தில் ஆகும்.