Sri Vachana Bhushanam - இரண்டாம் ப்ரகரணம் – உபாயம் (சூர்ணை 67)
இரண்டாம் ப்ரகரணம் – உபாயம்
அதுதானெப்போதுமுண்டு.
– அந்நினைவுதானவனுக்கெப்போதுண்டாவ தென்னவருளிச் செய்கிறார் (அதுதானெப்போதுமுண்டு) என்று தொடங்கி.
அப்படிப்பட்ட நினைவு எம்பெருமானுக்கு எப்போது உண்டாகும் என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.
– ”எப்போதும்” என்றது, இவன் யாதானும் பற்றி நீங்கித் திரிகிற காலத்தோடு இன்றோடு வாசியற ஸர்வ காலத்திலுமென்றபடி.
“எப்போதும்” என்பதன் மூலம் உணர்த்தப்பட்டது என்ன? திருவிருத்தம் (96) – யாதானும் பற்றி நீங்கித் திரிகிற என்பதற்கு ஏற்ப வேறு உபாயங்களைப் பற்றி, அதன் பின்னே சென்ற காலம் தொடக்கமாக, எம்பெருமானே கதி என்று வந்து நின்ற காலம் முடிய, எப்போதும் வேறுபாடு காணாமல் அவன் சேதனனை எண்ணியபடி உள்ளான் என்று கருத்து.