Sri Vachana Bhushanam - இரண்டாம் ப்ரகரணம் – உபாயம் (சூர்ணை 56)

இரண்டாம் ப்ரகரணம் – உபாயம்

அங்கம் தன்னையொழிந்தவற்றைப் பொறாதொழிகை.

சரமச்லோகத்தில் இத்தை ஸாங்கமாக விதிக்கையாலே “யத் யத் ஸாங்கம் தத்தத் ஸாதநம்” என்கிற ந்யாமிதுக்கும் வாராதோவென்ன; அங்க ஸ்வரூபத்தை தர்சிப்பிக்கவே அந்த ந்யாயமிங்குவாராதென்று பார்த்து, இது தன்னையருளிச் செய்கிறார் (அங்கம்) என்று தொடங்கி.

சரமச்லோகம் இத்தகைய ப்ரபத்தி என்பதை அங்கமாக விதிக்கிறதே. ஆகவே, ”எது அங்கத்துடன் உள்ளதோ அது உபாயம்” என்ற ந்யாயத்தின்படி ப்ரபத்தி உபாயம் ஆகிவிடாதோ? ஆகாது. ”அங்கத்தின் தன்மை இதற்குக் கூறியதால் மட்டுமே இதற்கு அந்த ந்யாயம் பொருந்தாது” என்கிறது. அந்த அங்கத்தை இங்கு அருளிச்செய்கிறார்.

(தன்னை யொழிந்தவற்றைப் பொறாதொழிகையாவது) - ஸ்வீகாரரூபமான தன்னையொழிந்த சேதந ப்ரவ்ருத்திகளி லொன்றையும் ஸஹியாதபடி யிருக்கை. ஸாதநரூப ஸகல ப்ரவ்ருத்திகளினுடையவும் ஸவாஸநத்யாகமிறே யிதுக்கங்கம். ”யத்யத் ஸாங்கம்” என்கிறவிடத்தில், ப்ரவ்ருத்தி ரூபாங்க ஸஹிதமானவற்றையிறே ஸாதநமாகச் சொல்லுகிறது; அப்படியன்றிக்கே, இதினுடைய வங்கம் நிவ்ருத்தி ரூபமாகையாலே; இது தானே யிதினுடைய வநுபாயத்வ ஸூசகமென்று கருத்து.

– ”தன்னை யொழிந்தவற்றைப் பொறாதொழிகையாவது” என்பதன் மூலம் - எம்பெருமானைப் பற்றவேண்டும் என்ற நோக்கத்துடன் மக்கள் செய்கின்ற செயல்களில் தன்னைத் தவிர மற்ற எதனையும் ஏற்றுக் கொள்ள இயலாமல் இருப்பதே ப்ரபத்திக்கு அங்கமாக உள்ளது. ஆனால் சாதனம் என்ற பெயர் கொண்ட அனைத்தையும் அவற்றின் வாஸனையுடன் கைவிடுவது அல்லவோ ப்ரபத்திக்கு அங்கம் என்ற கேள்வி எழலாம். யத்யத் ஸாங்கம் என்னும்போது செயல் ரூபமாக உள்ள அங்கத்துடன் கூடியவற்றையே ஸாதனம் என்பர். ஆனால் ப்ரபத்தியின் அங்கம் என்பது செயல்களைக் செய்யாமல் இருப்பது என்ற காரணத்தினால் இந்த ப்ரபத்தி என்பது அந்த ந்யாயத்தின்படி ஸாதனம் (உபாயம்) ஆகாது என்று கருத்து.