Sri Vachana Bhushanam - இரண்டாம் ப்ரகரணம் – உபாயம் (சூர்ணை 54)
இரண்டாம் ப்ரகரணம் – உபாயம்
இது தன்னைப் பார்த்தால் பிதாவுக்குப் புத்ரனெழுத்து வாங்குமாபோலேயிருப்பதொன்று.
இப்ப்ரபத்தி தனக்கு (தர்மபுத்ராதிகளும்) என்று தொடங்கி கீழுக்தரானவதிகாரிகள் பக்கலிலே ஸாதநதயா அநுஷ்டாநம் காண்கையாலும், கர்ம ஜ்ஞாந பக்தி ப்ரபத்திகளென்று உபாயங்களோடே ஸஹபடிதமாய்ப் போருகையாலும் ”யத் யேந காமகாமேந நஸாத்யம் ஸாதநாந்தரை: முமுக்ஷுணா யத் ஸாங்க்யேந யோகேந நச பக்தித: ப்ராப்யதே பரமம் தாம யதோ நாவர்த்ததே புந: தேந தேநாப்யதே தத்தந்ந்யா ஸேநைவ மஹாமுநே பரமாத்மாச தேநைவ ஸாத்யதே புருஷோத்தம:” என்றும், “இதம் சரணமஜ்ஞாநாம்” என்றும் இப்படியே சாஸ்த்ரங்களித்தை ஸாதநாமாகச் சொல்லுகையாலும் உபாயத்வ ப்ரதிபத்தி யோக்யதை யுண்டாகையாலே, அத்தை வ்யாவர்த்திக்கைக்காக அதுக்குடலான பலவற்றையுமருளிச் செய்கிறார் மேல்; அதில் ப்ரதமத்திலே, இப்ப்ரபத்தியை யுபாயமாகக் கொண்டால் வருமவத்யத்தை தர்சிப்பிக்கிறார் ”இது தன்னை” என்று தொடங்கி.
– கீழே உள்ள பல காரணங்களால் ப்ரபத்தி என்பதை உபாயமாக எண்ணி விடக்கூடிய நிலை ஏற்படும்: