Sri Vachana Bhushanam - இரண்டாம் ப்ரகரணம் – உபாயம் (சூர்ணை 48)

இரண்டாம் ப்ரகரணம் – உபாயம்

முக்க்யம் அதுவே.

இந்த ஹேதுத்ரயமடியாக வரும் ப்ரபத்திகளில் முக்க்யமேதென்ன? “முக்க்ய மதுவே” என்கிறார்.

இப்படியாக மூன்று காரணங்களின் அடிப்படையில் தோன்றும் ப்ரபத்திகளில் எந்த ஒன்று முக்கியமானது என்று கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.

– அதாவது, பக்தி பாரவச்யமடியாக ப்ரபத்தி பண்ணுமிடத்தில் ப்ராப்ய ருசி கண்ணழிவறவுண்டாகையாலே அதுவே முக்க்யமென்றபடி.

பக்தியின் பரவசம் காரணமாக உண்டாகின்ற ப்ரபத்தி என்பதில், அடையப்பட வேண்டிய இலக்கைக் குறித்த ருசி அதிகமாகவே உள்ளது. ஆகவே பக்தியின் பரவசம் காரணமாக விளைந்த ப்ரபத்தியே முக்கியமானது என்றார்.