Sri Vachana Bhushanam - இரண்டாம் ப்ரகரணம் – உபாயம் (சூர்ணை 47)
இரண்டாம் ப்ரகரணம் – உபாயம்
அங்கு ஒன்றைப் பற்றியிருக்கும்.
ஆனாலிம்மூன்றும் அவ்விடத்தில் ப்ரபத்தி காரணமாகிறதோ வென்ன? ”அங்கொன்றைப் பற்றியிருக்கும்” என்கிறார்.
– “ஆயினும் இந்த மூன்றும் அந்தந்த அதிகாரியின் ப்ரபத்திக்குக் காரணமாக உள்ளவையா?”, என்ற கேள்வி எழலாம். இதற்கான் விடையை அருளிச்செய்கிறார்.
அதாவது அவ்விடத்தில் ப்ரபத்தியானது மூன்றிலும் வைத்துக்கொண்டு ஊன்றியிருக்கிற பக்தி பாரவச்யத்தையே தனக்கு ஹேதுவாகப் பற்றியிருக்குமென்றபடி.
அங்கு ஏதேனும் ஒன்றைப் பற்றியே ப்ரபத்தி காணப்படும். அங்கு உள்ள ப்ரபத்தி என்பது பக்தியினால் பரவசமாக உள்ள தன்மையை மட்டுமே காரணமாகக் கொண்டு நிற்கும் என்றார்.