Sri Vachana Bhushanam - இரண்டாம் ப்ரகரணம் – உபாயம் (சூர்ணை 33)
இரண்டாம் ப்ரகரணம் – உபாயம்
பலநியமமின்றிக்கேயொழிந்தபடியென்னென்னில்; தர்மபுத்ராதிகளுக்குப் பலம் ராஜ்யம்; த்ரௌபதிக்குப் பலம் வஸ்த்ரம்; காகத்துக்கும் காளியனுக்கும் பலம் ப்ராணம்; ஸ்ரீகஜேந்த்ராழ்வானுக்குப் பலம் கைங்கர்யம்; ஸ்ரீவிபீஷணாழ்வானுக்குப் பலம் ராமப்ராப்தி; பெருமாளுக்குப் பலம் ஸமுத்ரதரணம்; இளையபெருமாளுக்குப் பலம் ராமாநுவ்ருத்தி.
– அநந்தரம், பல நியமாபாவ ப்ரச்நத்தையநுவதிக்கிறார் “பல நியமமின்றிக்கேயொழிந்தபடி யென்னென்னில்” என்று. அதுக்குத்தரமருளிச் செய்கிறார் “தர்மபுத்ராதிகளுக்கு பலம்” என்று தொடங்கி.
அடுத்து “பல நியமம் இல்லை” என்னும் கேள்வியை எழுப்பி (பலநியம மின்றிக்கேயொழிந்தபடியென்னென்னில்), அதற்கான விடையை அருளிச்செய்கிறார்.
– இத்தால், கீழ் அதிகாரி நியமாபாவத்துக் குடலாகக் காட்டப்பட்ட தர்ம புத்ராதிகள் தொடக்கமான ப்ரபத்தாக்களானவர்கள், ராஜ்யார்த்தமாகவும் வஸ்த்ரார்த்தமாகவும், ப்ராணார்த்தமாகவும், கைங்கர்யார்த்தமாகவும், ராமப்ராப்த் யர்த்தமாகவும்; ஸமுத்ரதரணார்த்தமாகவும், ராமாநுவ்ருத்த்யர்த்தமாகவும் ப்ரபத்தி பண்ணுகையாலே ப்ரபத்திக்குப் பலநியமமில்லையென்றதாய்த்து.
இந்தச் சூர்ணை முலம் உணர்த்தப்படுவது – கடந்த சூர்ணையில் “ப்ரபத்திக்கு அதிகாரி நியமம் இல்லை” என்பதற்கு உதாரணமாகக் கூறப்பட்ட பாண்டவர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் செய்தது பற்றிக் கூறப்படுகிறது. மேலே கூறப்பட்டவர்கள் இராஜ்யம் அடைதல், வஸ்த்ரம் பெறுதல், உயிரை நிலை நிறுத்துதல், கைங்கர்யம் வேண்டுதல், இராமனை அடைதல், கடலில் அணை கட்டுதல், இராமன் பின்னே செல்லுதல் போன்ற பல செயல்களுக்காக ப்ரபத்தி செய்தனர். ஆகவே ப்ரபத்தி என்பதற்கு “இன்ன பலன் அடைவதற்காக” என்ற பல நியமம் இல்லை என்றாகிறது.