Sri Vachana Bhushanam - இரண்டாம் ப்ரகரணம் – உபாயம் (சூர்ணை 32)

இரண்டாம் ப்ரகரணம் – உபாயம்

ல் கூறப்பட்ட தர்மபுத்திரர் முதலான அதிகாரிகளிடம் ப்ரபத்தியைச் சாதனமாகக் கொண்ட செயல்பாடு காணப்படுகிறது. கர்மம், ஞானம், பக்தி, ப்ரபத்தி என்று ப்ரபத்தியானது மற்ற உபாயங்களுடன் சேர்த்துப் பேசப்படுகிறது. லக்ஷ்மீதந்திரம் - யத் யேந காமகாமேந நஸாத்யம் ஸாதநாந்தரை: முமுக்ஷுணா யத் ஸாங்க்யேந யோகேந நச பக்தித: ப்ராப்யதே பரமம் தாம யதோ நாவர்த்ததே புந: தேந தேநாப்யதே தத்தந்ந்யா ஸேநைவ மஹாமுநே பரமாத்மாச தேநைவ ஸாத்யதே புருஷோத்தம: – ஐச்வர்யத்தை விரும்பும் யாரால் எந்த ஓர் ஐச்வர்யம் மற்ற சாதனங்களால் பெற இயலாமல் உள்ளதோ அது ப்ரபத்தியினால் பெறத் தக்கது; எந்த ஒரு முமுக்ஷுவால் மீண்டும் திரும்புதல் இல்லாமை என்ற இடமான பரமபதமானது கர்மயோகம் போன்றவற்றால் பெற இயலாமல் உள்ளதோ அந்த இடம் ப்ரபத்தியினால் அடையப்படுகிறது; கைவல்யத்தை விட உயர்ந்த பரமாத்ம அனுபவம் ப்ரபத்தியில் கிட்டுகிறது. லக்ஷ்மீ தந்திரம் – இதம் சரணமஜ்ஞாநாம் – அறிவற்றவர்களுக்கும் இந்த ப்ரபத்தியே உபாயம் ஆக மேலே உள்ள பல வரிகளின் மூலம் ப்ரபத்தியை ஓர் உபாயமாக எண்ணிவிடக்கூடிய வாய்ப்பு உள்ளது. இந்த எண்ணத்தை நீக்கும் பொருட்டு மற்ற பலவற்றையும் விளக்குகிறார். இப்படியாக விளக்கவுள்ள பலவற்றில், முதலில் ப்ரபத்தியை உபயமாக எண்ணினால் வரும் குற்றத்தை இந்தச் சூர்ணையில் அருளிச்செய்கிறார்.

– ”இது தன்னைப் பார்த்தால்” என்றது இச்சேதனீச்வர விஷயத்தில் பண்ணுமிப்ப்ரபத்தி தன்னையுபாயமென்னப் பார்த்தாலென்றபடி. ஈச்வரன் தன்னை ரக்ஷிக்கைக்கு ஹேதுவாக விச்சேதநன் பண்ணும் ப்ரபத்தி தன்னை நிரூபித்தால் என்றிங்ஙனே அநத்யாஹாரேண யோஜிக்கவுமாம்; அப்போதும் அர்த்த மொக்குமிறே. – ”பிதாவுக்குப் புத்ரனெழுத்து வாங்குமாப்போலே யிருப்பதொன்று” என்றது உத்பாதகனாகையாலே ஹிதைஷியாய் தானறியாத தசையிலும் தன்னை ரக்ஷித்துக் கொண்டுபோரும் தமப்பனுக்கு, புத்ரனானவன், தானறிந்த தசையிலே என்னை நீ ரஷிக்கவேணும் என்றெழுத்து வாங்கினால், இரண்டு தலைக்குமுண்டான உறவுக்குக் கொத்தையாமாப்போலே, ஸத்தாகாரணபூதனாய் ஸர்வதசையிலும் ரக்ஷகனாய்க் கொண்டு போருகிற அகாரவாச்யனான ஸர்வேச்வரனுக்கும் மகாரவாச்யனான விவனுக்கு முண்டான ஸம்பந்தத்துக் கவத்யகர மென்றபடி. ”எழுத்து வாங்குகையாவது” ரக்ஷகன் பேரைத் தன் மார்பிலே யெழுதிக் கொள்ளுகை.

– “இது தன்னைப் பார்த்தால்” – சேதனர்கள் எப்பெருமானிடம் செய்கின்ற ப்ரபத்தியை ஓர் உபாயம் என்று கூறினால் – என்று பொருள். மேலும், எம்பெருமான் தங்களைக் காப்பாற்றுவதற்கான உறுப்பாகவே சேதனர்கள் இந்த ப்ரபத்தியைக் செய்கின்றனர் என்று ப்ரபத்தியை நிரூபிக்கும்போது “உபாயம்” என்ற சொல்லை எடுத்தாள வேண்டிய அவசியம் இல்லாமலேயே கூற இயலும். அப்போதும் இதே கருத்து வெளிப்படும். “பிதாவுக்குப் புத்ரனெழுத்து வாங்குமாப்போலே யிருப்பதொன்று” – தன்னை இந்த உலகத்தில் உண்டாக்கியவன் என்பதால் தனது நலத்தை எப்போதும் எண்ணியவனக, தான் ஏதும் அறியாத பருவத்தில் இருந்தபோதிலும், ஒரு மகன் தந்தையிடம் “என்னைப் நீ பாதுகாக்க வேண்டும்” என்று வளர்ந்த பிறகு எழுதி வாங்கிக் கொள்வானோ? அப்படி எழுதி வாங்கிக் கொண்டால் அந்த இருவருக்கும் இடையே உள்ள உறவு என்பது கொச்சையாகிவிடாதோ? இது போன்று நாம் அனைவரும் “இருக்கிறோம்” என்று கூறும்படியாக நம்மை வைப்பதற்குக் காரணமாக உள்ளவனும், அனைத்து நிலையிலும் நமக்குப் பாதுகாப்பாக உள்ளவனும், ப்ரணவத்தில் உள்ள ”அ” என்ற எழுத்தின் பொருளாக உள்ளவனும் ஆகிய எம்பெருமானை அடையும் உபாயமாக ப்ரணவத்தில் உள்ள “ம” என்ற எழுத்தின் பொருளான ஜீவன், ப்ரபத்தியைக் கைக்கொண்டால் (உபாயம் என்று கைக்கொண்டால்) இந்த இருவருக்கும் இடையே உள்ள ஸம்பந்தத்திற்கு (ரக்ஷகன், ரக்ஷிக்கப்படுபவன்) குற்றமே உண்டாகும். ”எழுத்து வாங்குகை” என்றால் தனக்குத் தொடர்பு இல்லாமல் நம்மைக் காப்பாற்றுபவன் பெயரை, தான் தொடர்பு இல்லாமல் காப்பாற்றப்பட்டதால் மார்பில் எழுதிக்கொள்ளுதல்.