Sri Vachana Bhushanam - இரண்டாம் ப்ரகரணம் – உபாயம் (சூர்ணை 28)

இரண்டாம் ப்ரகரணம் – உபாயம்

ப்ரகார நியதியில்லையென்னுமிடம் எங்கும் காணலாம்.

– ப்ராகார நியமராஹித்யத்தை தர்சிப்பிக்கிறார்மேல் (ப்ரகாரநியதி) என்று தொடங்கி.

– இன்ன முறையைப் பின்பற்றிய பின்னரே ப்ரபத்தி செய்யவேண்டும் என்ற ப்ரகார நியமம் இல்லை என்பதை உணர்த்துகிறார்.

– ”எங்கும் காணலாம்” என்றது, இத்தையநுஷ்டிப்பார் ச்ரவிப்பார் எல்லார் பக்கலிலுங் காணலாமென்றபடி.

– “எங்கும் காணலாம்” என்பதன் மூலம் ப்ரபத்தியைக் கைக்கொள்கிறவர்கள், கேட்கின்றவர்கள் போன்ற அனைவரிடத்திலும் காணலாம் என்றார்.