Sri Vachana Bhushanam - இரண்டாம் ப்ரகரணம் – உபாயம் (சூர்ணை 24)
இரண்டாம் ப்ரகரணம் – உபாயம்
விஷய நியமமேயுள்ளது.
இவை இல்லையாகில் மற்றும் சில நியமங்கள்தான் இதுக்குண்டோ வென்ன, அருளிச் செய்கிறார் (விஷய நியமமேயுள்ளதென்று).
இப்படியாக ப்ரபத்திக்குக் காலம், தேசம் போன்ற விதிமுறைகள்ஏதும் இல்லை என்றால், வேறு ஏதாவது விதிமுறைகள் ப்ரபத்திக்கு உண்டோ என்ற கேள்வி எழலாம். இதற்கு விடை அருளிச்செய்கிறார்.
– அதாவது, இன்ன விஷயத்திலே செய்யவேணும் என்கிற நியமமே யிதுக்குள்ளதென்றபடி. இவையெல்லாம் தாமே மேலே உபபாதித்தருளுகிறாரிறே.
இன்ன விஷயத்தில் மட்டுமே செய்யவேண்டும் என்னும் விதிமுறை மட்டுமே ப்ரபத்திக்கு உள்ளது என்கிறார். இவற்றைத் தானே பின்னர் (சூர்ணை 26 தொடங்கி) அருளிச்செய்ய உள்ளார்.