Sri Vachana Bhushanam - முதல் ப்ரகரணம் – புருஷகார உபாய வைபவம் (சூர்ணை 19)
முதல் ப்ரகரணம் – புருஷகார உபாய வைபவம்
ஜிதேந்த்ரியரில் தலைவனாய், ஆஸ்திகாக்ரேஸரனாய், கேசவஸ்யாத்மா என்று க்ருஷ்ணனுக்கு தாரகனாயிருக்கிற அர்ஜுனனுக்கு தோஷமேதென்னில், பந்துக்கள் பக்கல் ஸ்நேஹமும் காருண்யமும் வதபீதியும்.
இப்படி தோஷப்ரஸித்தி அர்ஜுனன் பக்கலில்லாமையாலும், குணப்ரதையுண்டாகையாலும் இவனுக்கு தோஷமேதென்கிற சங்கையையநுவதித்துக் கொண்டு தத்தோஷங்களை தர்சிப்பிக்கிறார் (ஜிதேந்த்ரியரிலென்று தொடங்கி).
– அரக்கிகள் போன்று தோஷங்கள் அல்லது குணங்க்கேடுகள் ஏதும் அர்ஜுனனிடம் இல்லை. மேலும் பிரபலமான பல உயர்ந்த குணங்கள் கொண்டவன் ஆவான். ஆயினும் அர்ஜுனனின் குற்றம் என்ப்து என்ன ? இப்படி ஒரு கேள்வி எழலாம் என்பதைத் திருவுள்ளத்தில் பற்றியவராக, அவனது குற்றங்களை இங்கு விளக்குகிறார்.
(ஜிதேந்த்ரியரில் தலைவன்) என்றது - ஆபரணஸ்யாபரணம் ப்ரஸாதந விதே ப்ரஸாதந விசேஷ: உபமாநஸ்யாபி ஸகே ப்ரத்யுபமாநம் வபுஸ் தஸ்யா: என்னும் வைலக்ஷண்யமுடைய ஊர்வசி வந்து மேல் விழ, முறை கூறி நமஸ்கரித்துக் கடக்க நின்றவனாகையாலே, இந்த்ரிய ஜயம் பண்ணினாரில் தனக்கு மேற்பட்டாரில்லாதவ னென்கை. (ஆஸ்திகாக்ரேஸரன்) என்றது - தர்மாதர்ம பரலோக சேதநேச்வராதிகளுக்கு ப்ரதிபாதகமான சாஸ்த்ரத்தில் ப்ராமாண்ய புத்தியுடையவர்களுக்கு முன் நடக்குமவனென்கை. – (கேசவஸ்யாத்மா என்று க்ருஷ்ணனுக்கு தாரகனாயிருக்கிற) என்றது – அர்ஜுந: கேசவஸ்யாத்மா க்ருஷ்ணச் சாத்மா கிரீடிந: என்று அந்யோந்யம் ப்ராணபூதராயிருப்பர்களென்கையாலே, இவனைப் பிரியில் க்ருஷ்ணன் தரிக்கமாட்டானென்னும்படி அபிமத விஷயமாயிருக்குமவனென்கை. இப்படியிருக்க (அர்ஜுநனுக்கு தோஷமேது) என்று சங்கை (என்னில்) என்றது – அநுவாதம். தோஷங்கள் தன்னைச் சொல்லுகிறது (பந்துக்கள் பக்கல் ஸ்நேஹமும் காருண்யமும் வதபீதியும்) என்று. இவற்றில் ஸ்நேஹ காருண்யங்கள் தோஷங்களாகிறது - அஸ்தாநே க்ருதங்களாகையாலே; வதபீதி தோஷமாகிறது - ஸ்வதர்மத்தில் அதர்மபுத்த்யா வந்ததாகையாலே; அஸ்தாந ஸ்நேஹ காருண்ய தர்மாதர்ம தியாகுலம் என்றிறே ஆளவந்தாரருளிச்செய்தது. தர்மக்ஷேத்ரே குருக்ஷேத்ரே ஸமவேதா யுயுத்ஸவ: என்கிறபடியே - யுத்தேச்சையாலே இரண்டு தலையும் வந்தணைந்து நின்ற பின்பு யுத்தமே கர்த்தவ்யமாயிருக்க, அத்தசையிலே, ந காங்க்ஷே விஜயம் க்ருஷ்ண ந ச ராஜ்யம் ஸுகாநிச, கிம் நோ ராஜ்யேந கோவிந்த கிம் போகைர் ஜீவதேநவா, யேஷாமர்த்தே காங்க்ஷிதம் நோ ராஜ்யம் போகாஸ் ஸுகாநிச - த இமே வஸ்திதாயுத்தே ப்ராணாந் த்யக்த்வா தநாநிச இத்யாதிப்படியே இவர்களைக் கொன்று நாம் ஜீவிப்பதொரு ஜீவநமுண்டோவென்று பந்துக்கள் பக்கல் பண்ணின ஸ்நேஹம் ஸ்வவர்ண விருத்தமாகையாலே நிஷித்தமிறே; தாந் ஸமீக்ஷ்ய ஸ கௌந்தேயஸ் ஸர்வாந் பந்தூநவஸ்திதாந், க்ருபயா பரயாவிஷ்டோ விஷீதந்நிதமப்ரவீத் என்னும்படி - அத்தசையில் பண்ணின காருண்யமும் பச்வாலம்பநத்தில் காருண்யம்போலே நிஷித்தமிறே. கதம் நஜ்ஞேயமஸ்மாபி: பாபாதஸ்மாந்நிவர்த்திதும், குலக்ஷய க்ருதம் தோஷம் ப்ரபச்யத்பிர் ஜநார்த்தந என்று தொடங்கி, அஹோ பத மஹத் பாபம் கர்த்தும் வ்யவஸிதா வயம் - யத் ராஜ்ய ஸுகலோபேந ஹந்தும் ஸ்வஜந முத்யதா: என்னுமளவும் ஸ்வவர்ண தர்மமான வதத்திலே அதர்ம புத்த்யா பண்ணின பீதியுமப்படியேயிறே.
– ”ஜிதேந்த்ரியரில் தலைவன்” என்பதன் மூலம் உணர்த்தபட்டது என்ன வென்றால்: ஆபரணஸ்யாபரணம் ப்ரஸாதந விதே ப்ரஸாதந விசேஷ: உபமாநஸ்யாபி ஸகே ப்ரத்யுபமாநம் வபுஸ் தஸ்யா: - ஆபரணங்கள் அனைத்திற்கும் ஆபரணமாகவும், அலங்காரங்கள் அனைத்திற்கும் அலங்காரமாகவும், உபமானங்கள் அனைத்திற்கும் உபமானமாகவும் ஊர்வசியின் சரீரம் உள்ளது - என்று கூறும்படியாக உள்ளவளும், அழகு நிறைந்தவளும் ஆகிய ஊர்வசி அர்ஜுனனை நாடி வந்தபோதிலும், இவன் முறையாக வணங்கி நின்றான். ஆக புலன்களைத் தன் வசப்படுத்தியவர்களில் இவனுக்கு மேம்பட்டவர்கள் இல்லை என்னும்படியாக உள்ள அர்ஜுனன் – இதுவே உணர்த்தப்பட்டது. “ஆஸ்திக அக்ரேஸரன்” என்றால் - தர்மம், அதர்மம், பரமபதம், சேதனம், ஈச்வரன் போன்ற பல பிரிவுகளைத் தெளிவாக கூறுவது சாஸ்திரங்களாகும். இந்தச் சாஸ்த்ரங்களை ப்ரமாணமாகக் கொண்டு பலர் வாழ்கின்றனர். இப்படிப்பட்ட அறிவை உடையவர்களில் முதன்மையானவன் என்று கருத்து. – ”கேசவஸ்யாத்மா என்று க்ருஷ்ணனுக்கு தாரகனாயிருக்கிற” என்றால்: அர்ஜுந: கேசவஸ்யாத்மா க்ருஷ்ணச் சாத்மா கிரீடிந: - அர்ஜுனன் கேசவனுக்கு ஆத்மாவாக உள்ளான்; க்ருஷ்ணன் அர்ஜுனனுக்கு ஆத்மாவாக உள்ளான் – என்று கூறுவதற்கு ஏற்ப இந்த இருவரும் ஒருவரின் உயிராக மற்றவர் உள்ளனர். ஆக அர்ஜுனனை விட்டுப் பிரிந்தால் க்ருஷ்ணன் தாங்கமாட்டான் என்பதற்கு ஏற்ப க்ருஷ்ணனின் ப்ரியமான விஷயமாக உள்ளவன். இப்படியாக அர்ஜுனன் உள்ளபோது, அவனுக்கு என்ன தோஷம் உள்ளது என்ற சந்தேகம் எழ, அதற்குச் சமாதானம் அருளிச் செய்கிறார். அந்தத் தோஷங்கள் பற்றி இங்கு அருளிச் செய்கிறார். இதனை - பந்துக்கள் பக்கல் ஸ்நேஹமும் காருண்யமும் வதபீதியும் - என்றார். இவற்றில் சிநேகம், கருணை முதலியவை எப்படித் தோஷங்கள் ஆயின? அவை அவசியம் இல்லாத இடங்களில் வெளிப்படுவதால், தோஷங்கள் ஆனது. வதபீதி தோஷம் உண்டானது (கொல்வது என்ற செயல் காரணமாக உண்டான பயம்; அந்தப் பயமே தோஷம்) எப்படி? க்ஷத்ரியனான தனது குல தர்மத்தை ஏற்று நடந்தாலும், பாவம் உண்டாகும் என்ற தவறான எண்ணம் காரணமாக இந்தத் தோஷம் உண்டானது. இதனை ஸ்வாமி ஆளவந்தார் - அஸ்தாந ஸ்நேஹ காருண்ய தர்மாதர்ம தியாகுலம் - தவறான இடத்தில் தோன்றிய அன்பு காரணமாக அல்லவோ தர்மத்தை அதர்மம் என்று எண்ணிக் கலங்கினான் – என்றார். தர்மக்ஷேத்ரே குருக்ஷேத்ரே ஸமவேதா யுயுத்ஸவ: – தர்மக்ஷேத்ரமான குருக்ஷேத்ரத்தில் இருவரும் வந்து நின்றனர் - என்று கூறுவதற்கு ஏற்ப, யுத்தம் செய்யவேண்டும் என்ற எண்ணம் மேலிட இரண்டு பிரிவினரும் யுத்தபூமியில் வந்து நின்றனர். அதன் பின்னர், அங்கு யுத்தம் புரிதல் என்பதே கைக்கொள்ளவேண்டிய செயலாகும். அப்போது அதனை விடுத்து, கீழே உள்ளது போன்று (கீதை: 1-32, 33) அர்ஜுனன் கூறினான்: • கீதை (1-32) - ந காங்க்ஷே விஜயம் க்ருஷ்ண ந ச ராஜ்யம் ஸுகாநிச, கிம் நோ ராஜ்யேந கோவிந்த கிம் போகைர் ஜீவதேநவா – க்ருஷ்ணா! இப்படிப்பட்ட வெற்றியை நான் விரும்பவில்லை. எனக்கு இவ்விதம் கிட்டும் அரசபதவியோ சுகங்களோ வேண்டாம். கோவிந்தா! அரச பதவி, நாடு, மோகங்கள், இந்த வாழ்க்கை ஆகியவை மூலம் நமக்கு என்ன பயன்? • கீதை (1-33) - யேஷாமர்த்தே காங்க்ஷிதம் நோ ராஜ்யம் போகாஸ் ஸுகாநிச - த இமே வஸ்திதாயுத்தே ப்ராணாந் த்யக்த்வா தநாநிச – நாம் அரச பதவி, செல்வம் போன்றவற்றை யாருக்காக விரும்புகிறோம்? இந்த உறவினர்களுக்காக அல்லவோ? அப்படிப்பட்ட இவர்கள் இன்று தங்கள் உயிர் மற்றும் செல்வங்கள் ஆகியவற்றையும் இழக்கத் தயாராக நிற்கின்றனர். “இப்படியாக இந்த உறவினர்கள் பலரையும் அழித்து, அதன் மூலம் எனக்கு ஒரு வாழ்வு உள்ளதோ?”, என்றான். ஆக, தனது உறவினர்கள் மீது கொண்ட அன்பானது இவனைத் தனது குலதர்மத்தை விட்டு விலகச் செய்ததால், அந்த அன்பு தவிர்க்கப்பட வேண்டியது அல்லவோ? மேலும் கீதை (1-27) – தாந் ஸமீக்ஷ்ய ஸ கௌந்தேயஸ் ஸர்வாந் பந்தூநவஸ்திதாந், க்ருபயா பரயாவிஷ்டோ விஷீதந்நிதமப்ரவீத் - குந்தியின் புத்திரனான அர்ஜுனன் தன் முன்பாகத் தனது உறவினர்கள் அனைவரும் நிற்பதைக் கண்டான்; இதனால் கருணை கொண்டவனாகவும், துன்பம் அடைந்தவனாகவும் பின்வருமாறு உரைத்தான் – என்றது காண்க. யாகத்தில் செய்யும் உயிர் வதைக்கு அஞ்சுவது போன்று இங்கு ஏற்பட்ட கருணை என்பதும் விலக்கப்பட வேண்டியதாகும். அடுத்து கீதை (1-39) - கதம் நஜ்ஞேயமஸ்மாபி: பாபாதஸ்மாந்நிவர்த்திதும், குலக்ஷய க்ருதம் தோஷம் ப்ரபச்யத்பிர் ஜநார்த்தந - க்ருஷ்ணா! நாம் நமது குலத்தின் அழிவு பற்றியும், உண்டாகும் பாவங்கள் பற்றியும் அறிவோம்; எனவே இந்தப் பாவங்களில் இருந்து விலகுவது பற்றி நாம் எவ்விதம் அறியாமல் இருப்போம் - என்று தொடங்கி, (1-45) - அஹோ பத மஹத் பாபம் கர்த்தும் வ்யவஸிதா வயம் - யத் ராஜ்ய ஸுகலோபேந ஹந்தும் ஸ்வஜந முத்யதா: - அரசபதவி என்பதன் மீது ஆசை கொண்டு நமது உறவினர்களையும் அழிப்பதற்குத் தயாராக உள்ளோம், இது மிகவும் பெரிய பாவத்தை ஏற்படுத்தும் என்று தெரிந்தும் அதனைச் செய்யத் தயாராக உள்ளோமே – என்று முடித்தான். இதன் மூலம் தனது குலதர்மமான “எதிரியை அழித்தல்” என்பதையும் அதர்மமாகக் கொள்ள வைக்கும் அச்சம் தள்ளப்பட வேண்டியதாகிறது.