Sri Vachana Bhushanam - முதல் ப்ரகரணம் – புருஷகார உபாய வைபவம் (சூர்ணை 4)
முதல் ப்ரகரணம் – புருஷகார உபாய வைபவம்
அத்தாலேயது முற்பட்டது.
அதின் ப்ராபல்யத்தை இசைவிக்கிறார் அத்தாலே என்று தொடங்கி.
இந்தக் சூர்ணை மூலம் இதிகாசத்தின் மேன்மையை இவரும் இசைவிக்கிறார்.
அந்த ப்ராபல்யத்தாலே, இதிஹாஸ புராணம் பஞ்சமம் என்றும், இதிஹாஸ புராணாப்யாம் என்றும் ச்ருதிஸ்ம்ருதிகளிலே இரண்டையும் சேரச் சொல்லுகிற வளவில், இதிஹாசமானது புராணத்துக்கு முன்னே சொல்லப்பட்டதென்கை. த்வந்த்வ ஸமாஸத்தில் அல்பாச்தரமாதல் அப்யர்ஹிதமாதலிறே முற்படுவது. அதில் அல்பாச் தரமன்றியிலேயிருக்க, அது முற்பட்டது அப்யர்ஹிதத்வத்தாலேயிறே; இந்த அப்யர்ஹிதத்வத்துக்கு மூலம் அதி ப்ராபல்யமென்று கருத்து. அதவா (ஸ்ம்ருதீதிஹாஸ புராணங்களாலே) என்று பாகத்வயோபப்ர்ம் ஹணங்களையும் ஸமஸ்தமாகச் சொல்லுகிறவிடத்தில், இதிஹாஸாச்ச புராணாநிச இதிஹாஸ புராணாநி, ஸ்ம்ர்தயச்ச இதிஹாஸ புராணாநிச ஸ்ம்ர்தீதிஹாஸ புராணாநி என்றிப்படி இவர்க்கு ஸமாஸவிவக்ஷையாகையாலே, அல்பாச்தரமான புராணத்துக்கு முன்னே இதிஹாஸத்தையருளிச் செய்ததின் கருத்தை (இவை இரண்டிலும்) இத்யாதியாலேயருளிச் செய்கிறாராகவுமாம். இந்த யோஜனையில் (அத்தாலேயது முற்பட்டது) என்கிறவிதுக்கு அந்த ப்ராபல்யத்தாலே (இதிஹாஸ புராணங்களாலே) யென்கிறவிடத்தில் புராணத்துக்கு முன்னே இதிஹாஸஞ் சொல்லப்பட்டதென்று பொருளாகக் கடவது. ஆக வேதார்த்த நிர்ணயம் பண்ணுமளவில், ததுபப்ரும்ஹணங்களாலே பண்ணவேணுமென்றும், அதில் பூர்வோத்தரபாகோபப்ர்ம்ஹணங்கள் இன்னதென்றும், உத்தரபாகோபப்ர்ம்ஹணங்களான இதிஹாஸ புராணங்களில் இதிஹாஸம் ப்ரபலமென்றும் அருளிச் செய்கையாலே, மேல் தாமருளிச் செய்யப் புகுகிற வர்த்தங்களுக்கு ப்ரமாணமொருங்க விட்டருளினாராய்த்து.
இப்படியாக இதிகாசத்திற்கு உள்ள மேன்மை காரணமாகவே கீழே உள்ள வரிகள் கூறப்பட்டன. • இதிஹாஸ புராணம் பஞ்சமம் - இதிகாசங்களும் புராணங்களும் ஐந்தாவது (வேதங்கள்) . • பார்ஹஸ்பத்ய ஸ்ம்ருதி – இதிஹாஸ புராணாப்யாம் – இதிகாசம் மற்றும் புராணம் மூலம். இப்படியாக ச்ருதி மற்றும் ஸ்ம்ருதியில் இரண்டுமே சேர்த்துக் கூறப்பட்டபோதிலும், புராணத்திற்கு முன்பாக இதிகாசமே முதலில் கூறப்பட்டதைக் காண்க. வடமொழி இலக்கணத்தில் உம்மைத் தொகையில் (இதிகாசமும், புராணமும் என்பதில் உள்ள “உம்”) சொற்களைக் கூறும்போது, குறைந்த உயிர் எழுத்துக்கள் உடைய சொற்கள் அல்லது மேன்மை கொண்ட சொற்கள் முதலில் கூறப்பட வேண்டும் என்னும் விதி உள்ளது. இங்கு இதிகாசம் என்ற சொல்லானது, புராணம் எனபதைக் காட்டிலும் அதிகமான உயிர் எழுத்துக்கள் கொண்டதாக உள்ளபோதிலும், அந்தச் சொல்லின் மேன்மை காரணமாக முதலில் வந்தது. இத்தகைய சிறப்பிற்குக் காரணம் அதன் ஏற்றமே ஆகும். அல்லது வேறு கருத்தும் கூறலாம். “ஸ்ம்ருதி இதிஹாஸ புராணங்களாலே” என்பதில் வேதத்தின் பூர்வபாகம் மற்றும் உத்தர பாகம் ஆகியவற்றின் பொருளை விரிவாக எடுத்துக் கூறும் நூல்கலைப் பற்றிக் கூறுவது காண்போம். அங்கு இதிஹாஸ – என்பதற்கு ஏற்ப இவருக்கு (ஸ்வாமி பிள்ளைலோகாசார்யர்) சமரசம் என்பதில் நோக்கம் அதிகம் என்பதால், குறைவான உயிரெழுத்துக்கள் கொண்டதாயினும் புராணம் என்ற பதத்திற்கு முன்பே இதிகாசம் என்பதை அருளிச்செய்தார். இதனை “இவை இரண்டிலும்” என்ற சூர்ணையிலும் அருளிச்செய்தார். இந்தச் சூர்ணையில் “அத்தாலே இது” என்பதற்குப் பொருள் என்னவென்றால், இந்தக் சிறப்பு காரணமாக, புராணத்திற்கு முன்பாக இதிகாசம் கூறப்பட்டது என்பதாகும். எனவே வேதங்களின் ஆழ்பொருளை இன்னது என்று உறுதியாக அறிவதற்கு – அதனுடைய உபப்ரமாணங்கள் கொண்டு அறிதல் வேண்டும். இவற்றில் பூர்வபாகத்தின் உபப்ரமாணம் இன்னது, உத்தரபாகத்தின் உபப்ரமாணம் இன்னது என்பதைக் கூறினார். உத்தரபாக உபப்ரமாணங்களான இதிகாசம் மற்றும் புராணங்களில், இதிகாசமே உயர்ந்தது என்றார். இப்படியாகத் தான் அருளிச்செய்யப் போகும் விஷயங்களுக்குப் ப்ரமாணம் என்பவற்றை முறைப்படுத்தினார் என்பது தெளிவாகிறது. அறிமுகம் ஸம்பூர்ணம் முதல் ப்ரகரணம் - புருஷகார வைபவம்