Sri Vachana Bhushanam - தனியன்கள் (Thaniyan 4)
தனியன்கள்
ப்ரத்யேக தனியன்கள்
பேறு தருவிக்குமவள் தன் பெருமை ஆறு பெறுவான் முறை அவன் கூறு குருவைப் பனுவல் கொள்வது இலையாகிய குளிர்ந்த அருள்தான் மாறில் புகழ் நற்குருவின் வண்மையோடு எலாம் வசனபூடணம் அதில் தேறிட நமக்கு அருள் முடும்பை இறைவன் கழல்கள் சேர் என் மனனே
புருஷகாரமாக நின்று, பெரும் பேறாகிய மோக்ஷத்தைக் கொடுக்க வைக்கின்ற பெரியபிராட்டியின் பெருமை, உபாயமான எம்பெருமானின் மேன்மை, பேற்றை அடைகின்ற அதிகாரியின் நிலை, சாஸ்திரமுறைப்படி அவன் ஆசார்யனிடம் நடந்து கொள்ளும் முறை, பயன் எதிர்பாராமல் எம்பெருமான் பொழிகின்ற கடாக்ஷத்தின் சிறப்பு, ஒப்பற்ற புகழ் கொண்ட ஆசார்யனே உபாயமாக உள்ள தன்மை, வேறு பல உயர்ந்த கருத்துக்கள் ஆகிய பலவற்றையும் ஸ்ரீவசனபூஷணம் என்ற இந்த நூலில் நாம் புரிந்து கொள்ளும் வகையில் அருளிச் செய்த பிள்ளை லோகாசார்யரின் திருவடிகளை, எனது மனமே! நீ அடைவாயாக.