Sri Vachana Bhushanam - தனியன்கள் (Thaniyan 2)
தனியன்கள்
ப்ரத்யேக தனியன்கள்
ஸாங்க அகில த்ரவிட ஸம்ஸ்க்ருத ரூப வேத ஸாரார்த்த ஸங்க்ரஹ மஹாரஸ வாக்ய ஜாதம் ஸர்வஜ்ஞ லோககுரு நிர்மிதம் ஆர்யபோக்யம் வந்தே ஸதா வசநபூஷண திவ்ய சாஸ்த்ரம்
அங்கங்களுடன் கூடியதான தென்மொழி மற்றும் வடமொழி ஆகியவற்றின் வடிவானதும், அனைத்து வேதங்களின் சுருக்கமானதும், மிகவும் இனிமையான சொற்கள் அமைந்ததும்; அனைத்தும் அறிந்தவரான பிள்ளை லோகாசார்யரால் செய்யப்பட்டதும், அறிந்தவர்களுக்கு இனிமையானதும் ஆகிய ஸ்ரீவசனபூஷணம் என்ற உயர்ந்த சாஸ்த்ரத்தை நான் வணங்குகிறேன்.