Sri Vachana Bhushanam - தனியன்கள் (Thaniyan 1)

தனியன்கள்

ப்ரத்யேக தனியன்கள்

புருஷகாரவைபவஞ்ச ஸாதனஸ்ய கௌரவம் தத் அதிகாரிக்ருத்யம் அஸ்ய சத்குரு உபசேவநம் ஹரிதயாம் அஹேதுகீம் குரோர் உபாயதாஞ்ச யோ வசநபூஷணே அவதத் ஜகத்குரும் தம் ஆச்ரயே

புருஷகாரத்தைச் செய்கின்ற (நமக்காக சிபாரிசு செய்கின்ற) பெரியபிராட்டியாரின் பெருமை, ஸித்தோபாயத்தின் (எம்பெருமான்) மேன்மை, ஸித்தோபாயத்தில் நிலைநிற்கும் ஒருவனின் ஒழுக்கம், அவனது சதாசார்ய அநுவர்த்தன முறை, எந்தப் பிரதிபலனையும் நம்மிடம் எதிர்பாராமல் தானாகவே சுரக்கும் எம்பெருமானுடைய கடாக்ஷத்தின் பெருமை, ஆசார்யனின் உபாயச் செயல் ஆகிய அனைத்தையும் ஸ்ரீவசனபூஷணத்தில் உரைத்த அந்த பிள்ளை லோகாசார்யரைப் பற்றுகிறேன்.