Sri Vachana Bhushanam - தனியன்கள் (Thaniyan 6)

தனியன்கள்

ரஹஸ்யார்த்த ஸம்ப்ரதாய பரம்பரைத் தனியன்கள்

ஸ்ரீஜிஹ்வா வததீச தாஸம் அமலம் அசேஷ சாஸ்த்ரவிதம் சுந்தரவரகுரு கருணா கந்தளித ஞானமந்திரம் கலயே

(ஸ்வாமி மணவாளமாமுனிகள் அருளிச்செய்தது) அழகிய மணவாளப்பெருமாள் பிள்ளையின் கடாக்ஷம் காரணமாக உண்டான ஞானத்திற்கு இருப்பிடமாக உள்ளவரும், தோஷங்கள் இல்லாதவரும், அனைத்து சாஸ்திரங்கள் அறிந்தவரும் ஆகிய திருநாவீறு உடைய பிரான்தாசரை வணங்குகிறேன்.