Acharya Hridayam - நான்காம் ப்ரகரணம் (சூர்ணை 231)

நான்காம் ப்ரகரணம்

இருந்தமையென்றது பூர்ண பரஜ்ஞாநம்.

அநந்தரம் பரஜ்ஞாநாவஸ்தையாகிறது இன்னதென்கிறார் (இருந்தமை) யென்று தொடங்கி.

அடுத்ததாக பரஞானம் என்ற நிலையை உணர்த்தும் பாசுரத்தைக் கூறுகிறார்.

அதாவது, ‘‘அந்தமில் பேரின்பத்தடியரோடிருந்தமை’’ என்று அடியார்கள் ‘‘குழாங்களையுடன் கூடுவதென்று கொலோ’’ என்றாசைப்பட்டபடியே அர்ச்சிராதி கதியாலே தேச விசேஷத்திலே போய் பகவத் ஸ்வரூபாதிகளைப் பரிபூர்ணாநுபவம் பண்ணுகிற நித்யஸூரிகள் திரளிலே கூடியிருந்தாராக தர்சித்துப் பேசின ‘‘சூழ்விசும்பணிமுகில்’’, பூர்ணமான பரஜ்ஞாநமென்கை.

அதாவது, ‘‘அந்தமில் பேரின்பத்தடியரோடிருந்தமை’’ என்று அடியார்கள், ‘‘குழாங்களையுடன் கூடுவதென்று கொலோ’’ என விரும்பியபடியே, அர்ச்சிராதி மார்க்கம் மூலமாக அடையப்படும் பரமபதத்திற்குச் சென்று, பகவானுடைய ஸ்வரூபம் போன்றவற்றைப் பரிபூர்ணமாக அனுபவிக்கின்ற நித்யஸூரிகளுடைய கூட்டத்தில் சேர்ந்து நின்றவர் போன்று தரிசனம் செய்து உரைத்த திருவாய்மொழி (10-9-1) - சூழ்விசும்பணிமுகில் - என்பதே பூர்ணமான பரஞானம் ஆகிறது.