Acharya Hridayam - மூன்றாம் ப்ரகரணம் (சூர்ணை 182)
மூன்றாம் ப்ரகரணம்
மார்க்கபந்து சைத்யம் மோஹநத்தே மடுவிடும்.
– (மார்க்கபந்து சைத்யம்) இத்யாதி. அதாவது இப்படி மோக்ஷ ப்ரதனான தன்னுடைய ப்ரஸாதத்தாலே மோக்ஷபூமிக்குப் போவார்க்கு “காளமேகத்தை யன்றி மற்றொன்றிலம் கதி”, “ஆத்தன் தாமரையடியன்றி மற்றிலமரணே” என்னும்படி ஆப்தனாய் கூடக்கொண்டுபோம் மார்க்கபந்துவானவனுடைய, “சுரிகுழல் கமலக்கட் கனிவாய்க் காளமேகம்” என்றும், “அவனடி நிழல் தடம்” என்றும், “மரதக மணித்தடம்” என்றும் சொல்லும்படி யிருந்துள்ள ஸாம்ஸாரிக ஸகல தாபஹரமான சைத்யம்; அம்ருத ப்ரதாந ஸமயத்திலே அஸுரர்களை மோஹிப்பித்த விடமாகையாலே மோஹந க்ஷேத்ரமான திருமோகூரிலே நிறைந்து நிலைபெற்றிருக்குமென்கை. மடுவிடுமென்றது “மரதக மணிதடம்” என்கிற ஸமாதியாலே.
– (மார்க்கபந்து) – இப்படியாக மோக்ஷத்தை அளிப்பவனாகிய அவன், தனது க்ருபை காரணமாக மோக்ஷம் அடைபவர்களுக்கு, திருவாய்மொழி (10-1-1) – காளமேகத்தை யன்றி மற்றொன்றிலம் கதி - என்றும், திருவாய்மொழி (10-1-6) - ஆத்தன் தாமரையடியன்றி மற்றிலம் அரணே – என்றும் கூறுவதற்கு ஏற்ப நம்புவதற்கு ஏற்றவனாகத் தன்னுடனே அவர்களை வழி நடத்திச் செல்லும் உறவினனாக உள்ளவனுடைய. (சைத்யம்) – திருவாய்மொழி (10-1-1) – சுரிகுழல் கமலக்கட் கனிவாய்க் காளமேகம் – என்றும், திருவாய்மொழி (10 -1-2) – அவனடி நிழல் தடம் - என்றும், திருவாய்மொழி (10-1-8) - மரதக மணித்தடம் - என்றும் கூறுவதற்கு ஏற்ப உள்ளதும், ஸம்ஸாரம் என்பதில் உழல்வதன் காரணமாக உண்டாகும் அனைத்துவிதமான துன்பங்களையும் போக்குவதும் ஆகிய குளிர்ச்சி. (மோக்ஷத்தே) - அமிர்தத்தை அளிக்கின்ற நேரத்தில் அஸுரர்கள் மயங்கும்படியாகச் செய்த இடம் இன்பதால் மோஹந க்ஷேத்ரம் என்ற பொருள் தருவதான திருமோகூரில், (மடுவிடும்) - நிறைவாக நிலை பெற்று நிற்கும்.