Acharya Hridayam - மூன்றாம் ப்ரகரணம் (சூர்ணை 172)

மூன்றாம் ப்ரகரணம்

ஸாதரரைப் பரிசழிக்கும் சேஷ்டிதாச்சர்யம் குளத்தே கொடிவிடும்.

– (ஸாதரரை) இத்யாதி. அதாவது “ஆழிவலவனை யாதரித்து – கூடச் சென்றேன்” என்று தன்பக்கல் ஆதரத்தோடே கூடியிருப்பாரை, “பல்வளையார் முன் பரிசழிந்தேன்” என்னும்படி ஸ்த்ரீத்வ ப்ரகாரமான லஜ்ஜாதியை யழிக்கும் “மாயக்கூத்தன்” என்கிற சேஷ்டிதாச்சர்யம்; “மாடக்கொடி மதிள் தென்குளத்தை” என்கிற திருக்குளத்தையிலே இதுக்கென்னக் கட்டின மாடக்கொடி முகேந ப்ரகாசிக்குமென்கை.

– (ஸாதரரை) – திருவாய்மொழி (8-2-4) - ஆழிவலவனை யாதரித்து கூடச் சென்றேன் - என்பதற்கு ஏற்ப தன்னிடம் மிகுந்த ஈடுபாடு, ப்ரேமை போன்ற அனைத்துடனும் கூடியபடி உள்ளவர்களுடைய. (பரிசு அழிக்கும்) திருவாய்மொழி (8-2-4) – பல்வளையார் முன் பரிசழிந்தேன் - என்பதற்கு ஏற்ப பெண்மைக்கு இலக்கணமாகத் திகழ்கின்ற நாணத்தை அழிப்பதான, (சேஷ்டிதாச்சர்யம்) – திருவாய்மொழி (8-2-4) - மாயக்கூத்தன் - என்பதற்கு ஏற்ப லீலைகளுடைய ஆச்சர்யம் என்பது, (குளத்தே கொடிவிடும்) திருவாய்மொழி (8-2-4) - மாடக்கொடி மதிள் தென்குளத்தை - என்பதற்கு ஏற்ப திருக்குடந்தையில், இதற்காகவே கட்டப்பட்ட மாடக்கொடி மூலம் வெளிப்படும்.