Acharya Hridayam - மூன்றாம் ப்ரகரணம் (சூர்ணை 168)

மூன்றாம் ப்ரகரணம்

கடிநகடக விகடநா பாந்தவம் அவ்வூரிலே த்விகுணம்.

(கடிதகடகேத்யாதி) அதாவது “பிரானிருந்தமை காட்டினீர்” என்கிற கடகராலே தன்பக்கல் கடிதரானார்க்கும் கடகரானார்க்கும் “இவளை நீரினி யன்னைமீ ருமக்காசை யில்லை விடுமினோ” என்னும்படி விகடநையைப் பண்ணுவதான “தேவபிரானையே தந்தை தாய்” என்கிறவவனுடைய பாந்தவம்; “அவ்வூர்த் திருநாமங் கேட்பது” என்று தோழியானவள் திருத்துலைவில்லி மங்கலமென்று தான் சொல்லும்போது, பெண்பிள்ளை சொன்னாற் போலினிதா யிராமையாலே அவ்வூர் என்று சொல்லப்பட்ட தேசத்திலே தேவபிரானு மரவிந்தலோசனனுமாய் நின்றிருந்துறையு மிரட்டைத் திருப்பதியாகையாலே யிரட்டித்திருக்கு மென்கை. (விகடநா பாந்தவம்) என்றது விகடநாகர பாந்தவ மென்றபடி.

– (கடித கடக) – திருவாய்மொழி (6-5-5) – பிரான் இருந்தமை காட்டினீர் -என்பதற்கு ஏற்ப சேர்ப்பவர்களால் தன்னிடம் கொண்டு வந்து சேர்க்கப்பட்டவர்களுக்கும், அப்படியாக சேர்ப்பவர்களுக்கும், (விகடநா பாந்தவம்) - திருவாய்மொழி (6-5-1) – இவளை நீர் இனி அன்னைமீர் உமக்காசை யில்லை விடுமினோ - என்பதற்கு ஏற்ப பொருந்தாமையை ஏற்படுத்துவதான திருவாய்மொழி (6-5-11) - தேவபிரானையே தந்தை தாய் – என்பதற்கு ஏற்ப உள்ள அவனுடைய உறவு என்ற தன்மையானது (அவ்வூரிலே) - திருவாய்மொழி (6-5-10) - அவ்வூர் - என்பதற்கு ஏற்ப தோழியானவள் “திருத்துலைவில்லி மங்கலம்” என்று கூறும்போது தனது தலைவி உரைத்தது போன்று இனிமையாக இல்லாத காரணத்தால் அந்தத் தோழி “அவ்வூர்” என்றே உரைத்தாள்; இப்படிப்பட்ட திவ்யதேசத்திலே தேவப்பிரான் மற்றும் அரவிந்தலோசனன் என்று இரண்டாக நிற்பதற்கு இரண்டு மடங்காக இருக்கும். (விகடநா பாந்தவம்) - பொருந்தாமையை ஏற்படுத்துகின்ற.