Acharya Hridayam - இரண்டாம் ப்ரகரணம் (சூர்ணை 141)
இரண்டாம் ப்ரகரணம்
கீழை மேலை வடக்கிலவை புறம்பாகத் தன்பற்று உள்ளசல்.
– ப்ரபத்தி பரரையும் அசலாகச் சொல்லலாமோவென்கிற சங்கையிலே அருளிச்செய்கிறார் (கீழையித்யாதி).
– ஆனால் ப்ரபத்தியில் ஈடுபட்டு நிற்பவர்களை அயலார் (கடந்த சூர்ணையில் உள்ள நாலயலார் - நான்கு அயலார்) என்று கூறலாமோ என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.
– அதாவது “கீழையகத்துத் தயிர் கடைய” என்றும், “மேலையகத்து நங்காய் வந்து காண்மின்கள்” என்றும், “வடக்கிலகம் புக்கிருந்து மின்போல் நுண்ணிடையாளொரு கன்னியை வேற்றுருவம் செய்து வைத்த” என்றும், க்ரியையும் தர்சநமும் அநுபவமுமாகிற கர்மயோகமும் ஜ்ஞாநயோகமும் பக்தியோகமும் ஸித்த ஸாதந பரர்க்குப் புறவசலாய், அவ்விஷயந்தன்னில் ஸ்வகத ஸ்வீகாரம் உள்ளசலா யிருக்குமென்றபடி.
– (கீழை மேலை வடக்கிலவை புறம்பு அசல் ஆக) - பெருமாள் திருமொழி (6-2) - கீழையகத்துத் தயிர் கடைய - என்றும், பெரியதிருமொழி (10-7-2) - மேலையகத்து நங்காய் வந்து காண்மின்கள் – என்றும், பெரியாழ்வார் திருமொழி (3-1-2) – வடக்கிலகம் புக்கிருந்து மின்போல் நுண்ணிடையாளொரு கன்னியை வேற்றுருவம் செய்து வைத்த - என்றும் உள்ள பாசுரங்களில் காணப்படும் செய்கை, காட்சி மற்றும் அனுபவம் என்பதான கர்மயோகம், ஞானயோகம், பக்தியோகம் ஆகியவை ப்ரபத்தியில் நிலைநிற்பவர்களுக்கு வெளியில் பகைகளாக உள்ளபோது, (தன் பற்று உள்ளசல்) - ஸர்வேச்வரனைத் தான் பற்றியுள்ள பற்று என்பது உட்புறம் பகைகளாக இருக்கும்.