Acharya Hridayam - இரண்டாம் ப்ரகரணம் (சூர்ணை 140)

இரண்டாம் ப்ரகரணம்

நாலயலார் அயற்சேரியார் உபாயசதுஷ்ட யாந்தர்யாமித்வ பரர்.

இந்த ப்ரஸங்கத்திலே அருளிச்செயலில் வரும் பல அந்யாபதேசங்களுக்கும் ஸ்வாபதேசங்களை அருளிச்செய்கிறார் மேல் பலவாக்யங்களாலே.

– இந்த நேரத்தில் அருளிச்செயல்களில் காணப்படும் பல அந்யாபதேசங்களுக்கும் [தான் கூறுவதை நேரடியாகக் கூறாமல், மற்றவை மூலம் கூறுவது], மறைமுகமான கருத்தை இந்தச் சூர்ணை தொடக்கமாக அருளிச்செய்கிறார்.

– அதாவது “நாலயலாரு மறிந்தொழிந்தார்” என்கிற நாலயலாரும், “அயற்சேரியீர்காள்” என்கிற அயற்சேரியாருமாகிறார் - கர்ம ஜ்ஞாந பக்தி ப்ரபத்திகளாகிற உபாய சதுஷ்டயத்திலும் ஊன்றியிருக்குமவர்களும், அர்ச்சாவதாராதிகளி லபேக்ஷையற்று அந்தர்யாமித்வத்திலே ஊன்றியிருக்கு மவர்களுமென்கை.

– (நாலயலார் உபாயசதுஷ்டய பரர்) – நாச்சியார் திருமொழி (12-2) - நாலயலாரு மறிந்தொழிந்தார் – என்பதற்கு ஏற்ப கூறப்படும் நாலயலார் என்றால் கர்மம், ஞானம், பக்தி, ப்ரபத்தி ஆகிய நான்குவிதமான உபாயங்களில் நிலைநிற்பவர்கள் ஆவர். (அயற்சேரியார் அந்தர்யாமித்வ பரர்) – திருவாய்மொழி (7-3-2) - அயற்சேரியீர்காள் - என்பதற்கு ஏற்ப கூறப்படும் அயற்சேரியார் என்றால் அர்ச்சாவதாரம் போன்றவற்றில் நாட்டம் இன்றி, அந்தர்யாமி நிலையில் மட்டுமே நிலைநிற்பவர்கள் ஆவர்.