Acharya Hridayam - இரண்டாம் ப்ரகரணம் (சூர்ணை 132)
இரண்டாம் ப்ரகரணம்
அச்சேத்ய மென்னுமது ஈரும் வேம் ஈரியாயுலர்த்த வென்னப்பட, சித்தம் சித்தாய் அல்லேனென்று நீங்க, கரணங்கள் முடியானே யிலவையாக, உடலமாத்மதர்மம் கொள்ள, காற்றுங்கழியும் கட்டியழக் கொண்ட பெருங்காதலுக்குப் பத்திமை நூல்வரம்பில்லையே.
இவருடைய பக்திதான் சாஸ்த்ரங்களில் சொல்லுகிறபடியே ஸக்ரமமாய் ஸாத்ம்யமாய் ஏகமுகமாயிராமலிப்படி அமர்யாதமாய் அஸாத்ம்யமாய் அநேக முகமாய் நடப்பானென்னென்னு மாகாங்க்ஷையிலே அருளிச்செய்கிறார் (அச்சேத்யமென்று தொடங்கி).
– நம்மாழ்வாருடைய பக்தியானது சாஸ்த்ரங்களில் கூறிய வரிசைப்படியும், ஒரே தன்மை கொண்டபடியும் இல்லாமல், கட்டுக்குள் அடங்காதவிதத்திலும் கைக்கொள்ள இயலாதபடியும் பலவித தன்மைகளுடனும் உள்ளது ஏன் என்ற ஆர்வம் மேலிட, அதனை அருளிச்செய்கிறார்.
– அதாவது, “அச்சேத்யோய மதாஹ்யோய மக்லேத்யோசோஷ்ய ஏவச” என்றுச் சேதந தஹந க்லேதந சோஷணா நர்ஹமாகச் சொல்லப்படு மாத்மவஸ்து “சிவனொடு பிரமன் வண்திருமடந்தை சேர் திருவாக மெம்மாவி யீரும்” என்று பிராட்டியோடு ருத்ராதிகளோடு வாசியற உடம்பு கொடுக்குமவனுடைய சீலம் ஸ்மாரகமாய் என்னாத்மாவை யீராநின்றதென்றும், “வேமெமதுயிரழல் மெழுகிலுக்கு” என்று என்னாத்மாவானது நெருப்பிலிட்ட மெழுகுபோல உருக்குலைந்து வேவா நின்றதென்றும், “கண்ணனுக்கென்று ஈரியாய்” என்று நல்லது கண்டால் க்ருஷ்ணனுக் கென்கிற அநுஸந்தாநத்தாலே ஆர்த்ரதையை யடையுமென்றும், “வேட்கை நோய் மெல்லாவி யுள்ளுலர்த்த” என்று ப்ரேம வ்யாதியானது ம்ருது ஸ்வபாவமான ஆத்மாவைக் குருத்துவற்றாக வுலர்த்தவென்றும், இப்படிச் சேதநாத்யர்ஹமாயிற்றென்று ஸ்வயமேவ சொல்லும்படியாக, – “என்னெஞ்சென்னை நின்னிடையே னல்லேனென்று நீங்கி” என்று அசேதநமான சித்தமானது சேதந ஸமாதியையடைந்து அவன் விச்லேஷித்துப் போன உனக்குக் கரணமாவேனல்லேனென்று “ஸந்ந்யஸ்தம் மயா” என்கிறபடியே உறவறச் சொல்லித் தம்மை விட்டு நீங்க, பாஹ்ய கரணங்கள் “முடியானேயிற்”படியே சேதந ஸமாதியாலே ஒரு கரணத்தினுடைய வ்ருத்தியைக் கரணாந்தரமாசைப்படும்படி விடாய்க்க, “உடலம் நின்பாலன்பாயே நீராயலைந்து கரைய” என்று பகவத் ப்ரேம பாரவச்யத்தாலே ஆத்மா சிதிலமாய்ப் போகாதபடி கட்டின கரையான சரீரம் த்ரவ்யமிருந்த குஹையும் உருகுமாபோலே, அன்பும் அதுக்காச்ரயமு மென்றிரண்டின்றியே அன்பு தானொரு வடிவு கொண்டாப் போலேயாய், உத்தரோத்தரம் சைதில்யத்தை யடைந்து ஆத்மதர்மத்தை ஏறிட்டுக்கொள்ள “கடலும் மலையும்”, “இருளின் திணி வண்ணம்” இத்யாதிகளிற்படியே காற்றுக்கு ஸதத கதித்வமும், கழிக்கு ஏறுவது வடிவதாகையும் நியத ஸ்வபாவமென்றறியாதே, அவற்றுக்கு அவை பகவத் விரஹ க்லேச ஜநிதமாகக் கருதி அசேதநமானவற்றைத் தமக்கு ஸமதுக்கிகளாகக் கொண்டு “எம்மாற்றாமை சொல்லியழுவோமை” என்று தாம் அவற்றைக் கட்டிக்கொண்டு கிடந்து கதறும்படியாக “அலர் தூற்றிற்றது முதலாக் கொண்டவென் காதல்” என்றும், “மயல் பெருங்காதல்” என்றும் சொல்லுகிறபடியே பிறர் பழி சொன்னதுவே எருவாகப் பணைத்துச் செல்லுமதாய் க்ருத்யாக்ருத்யம் தெரியாதபடி அறிவுகேட்டை விளைப்பதுமான அபரிச்சேத்ய பக்திக்கு “ந சாஸ்த்ரம் நைவ ச க்ரம:” என்கிற தேசவிசேஷத்தில் அநுபவோபகரண பக்திபோலே சென்றபடி கண்டிருக்குமத்தனை யல்லது “பத்திமைக்கன்புடையேனாவதே” என்கிறபடியே நூல்பிடித்துப் பரிமாறும்படி வரம்பு கட்டவொண்ணாதிறே யென்கை. – இத்தால், “நிதித்யாஸிதவ்ய:” என்கிற விதிப்ரேரிதையாய் சேதந ஸாத்யையாய் க்ரமபரிணாமிநியான பக்தி போலன்றிக்கே அதுக்கெதிர்த்தட்டாய்க் கரையழிந்து செல்லுகிறவிது சாஸ்த்ரமர்யாதையின் கீழ் அடங்காதென்றதாய்த்து. ஆக, “ஞானத்தில் தம் பேச்சு” என்று தொடங்கி இவ்வளவும் ஜ்ஞாநதசையில் தாமான தன்மையாலும், ப்ரேமதசையில் ஸ்த்ரீத்வரூபேணவும் பேசுவரென்றும், ஸ்த்ரீத்வம் ஆத்மாவுக்கு வந்தேறியல்லாமையாலே இவர்க்கு இது ஸ்வாபாவிகமென்றும், அதுதான் ஸாமாந்யமன்றிக்கே ஆறு ப்ரகாரத்தாலே லக்ஷ்மீஸமரென்றும், மற்றைப் பிராட்டிமார் பகவத் பரிக்ரஹமுடையா ரெல்லாரோடும் ஸாம்ய முடையவரென்றும், ஸர்வதா ஸாம்யம் இவர்க்கு லக்ஷ்மியோடே யென்றும், மற்றும் பகவதநந்யராயும் பகவத் ப்ரத்யாஸந்ந ராயுமுள்ள லக்ஷ்மணாதிகள் தசரதாதிகள் படியும் இவர்க்குண்டென்றும், அவர்களில் இவர் வ்யாவ்ருத்தரென்றும், பிராட்டிமாரையும் அநந்தாதிகளையும் அவர்கள் தாமாகவே பாவிப்பரென்றும், இந்த பாவநாஹேதுவான இவருடைய ஸ்த்ரீத்வ வரலாற்றுக்கும் அநேக வ்ருத்திகளில் அபிநிவேசத்துக்கும் த்ரௌபதீ கௌஸல்யைகள் படிகளை த்ருஷ்டாந்திக்கை ஸ்தூலமென்றும், இந்த பாவவ்ருத்திகளுக்கு மூலமான பக்தி ப்ரகாரங்களையும் சொல்லிற்றாய்த்து.
– (அச்சேத்யம் என்னும் அது) - கீதை (2-24) – அச்சேத்ய: அயம் அதாஹ்ய: அயம் அக்லேத்ய: அசோஷ்ய: ஏவ ச - இந்த ஆத்மா வெட்டப்பட இயலாதவன், எரிக்கப்பட முடியாதவன், நனைக்கப்பட முடியாதவன், உலர்த்தப்பட முடியாதவன் – என்று கூறுவதற்கு ஏற்ப வெட்டுதல், எரித்தல், நனைத்தல், உலர்த்தல் போன்றவற்றைச் செய்ய இயலாதபடியாகக் கூறப்படும் ஆத்மாவானது. (ஈரும்) - திருவாய்மொழி (9-9-6) - சிவனொடு பிரமன் வண்திருமடந்தை சேர் திருவாக எம்மாவி ஈரும் – என்பதற்கு ஏற்ப பெரியபிராட்டியார், சிவன் போன்ற பலருக்கும் எந்தவிதமான வேறுபாடும் இன்றி தனது திருமேனியை அளிக்கின்ற அவனுடைய சீல குணத்தை எண்ணும்போது எனது ஆத்மாவை அந்த குணம் அறுத்தது என்றும். (வேம்) – திருவாய்மொழி (10-3-7) – வேம் எமது உயிர் அழல் மெழுகு இலக்கு - என்பதற்கு ஏற்ப எனது ஆத்மாவானது அக்னியில் இடப்பட்ட மெழுகு போன்று உருக்குலைந்து வெந்தபடி ஆனது என்றும். (ஈரியாய்) - திருவாய்மொழி (6-7-9) - கண்ணனுக்கென்று ஈரியாய் - என்பதற்கு ஏற்ப நன்மை அளிக்கும் எதனை நோக்கினாலும், இது க்ருஷ்ணனுக்கு ஆகும் என்று எண்ணுவதால் நீர்ப்பண்டம் போன்று நனைந்தபடியே இருக்கும் என்றும். (உலர்த்த) – திருவாய்மொழி (2-1-10) - வேட்கை நோய் மெல்லாவி உள் உலர்த்த - என்பதற்கு ஏற்ப அவன் மீது கொண்டுள்ள ப்ரேமை என்ற நோயானது மிகவும் மென்மையான ஆத்மாவைக் குருத்து போன்று உலர்த்தி என்றும். (என்னப்பட) - இப்படியாக வெட்டப்படுதல் முதலான பலவிதமான நிலைகளை அடைய தனது ஆத்மா தகுதியாக நின்றது என்று தானே கூறும்படியாக … – (சித்தம் சித்தாய் அல்லேன் என்று நீங்க) – திருவாய்மொழி (8-2-10) – என் நெஞ்சு என்னை நின்னிடையேன் அல்லேன் என்று நீங்கி – என்பதற்கு ஏற்ப அறிவில்லாத நெஞ்சமானது அறிவுள்ள பொருளின் தன்மையைப் பெற்று, “அவனால் பிரிந்து செல்லப்பட்ட உனக்கு நான் இனி உறுப்பு ஆகமாட்டேன்” என்று கூறி, ஸந்ந்யஸ்தம் மயா - என்னால் முழுவதுமாக விடப்பட்டது - என்பதற்கு ஏற்ப, உறவு நீங்கும் விதத்தில் உரைத்து தன்னை விட்டு நீங்க. (கரணங்கள் முடியானெயில் அவையாக) - மற்ற புற இந்த்ரியங்கள் அனைத்தும் திருவாய்மொழி (3-8-1) - முடியானேயில் - என்ற திருவாய்மொழியில் கூறுவதற்கு ஏற்ப அறிவுள்ள பொருள்களாக நின்று, ஒரு உறுப்பின் செய்கையை மற்றொரு உறுப்பு செய்ய விரும்புவதாகப் பெரும் ஆசையுடன் நிற்க. (உடலம் ஆத்ம தர்மம் கொள்ள) - திருவாய்மொழி (5-8-1) – உடலம் நின்பால் அன்பாயே நீராய் அலைந்து கரைய - என்பதற்கு ஏற்ப ஆத்மா உருக்குலைந்து விடாதபடி அமைத்து வைக்கப்பட்ட சரீரமானது, பகவானிடம் கொண்ட ப்ரேமையின் மிகுதி காரணமாக, பொன் வைக்கப்பட்ட குகையும் உருகுவது போன்று, ப்ரேமை மற்றும் அந்தப் ப்ரேமை தங்கியுள்ள இடம் என்று இரண்டாக இல்லாமல் ப்ரேமையானது ஒரு வடிவம் எடுத்தது போன்று, மேன்மேலும் உருக்குலைந்து ஆத்மாவின் தன்மையை எடுத்துக் கொள்ள. (காற்றும் கழியும் கட்டி அழ) - திருவாய்மொழி (2-1-4) - கடலும் மலையும் - என்றும், திருவாய்மொழி (2-1-8) – இருளின் திணி வண்ணம் - என்றும் கூறுவதற்கு ஏற்ப காற்றுக்கு எப்போதும் அலைந்தபடி இருப்பதே அதன் இயல்பு என்றும், உப்பங்கழிக்கு ஏறுவதும் வடிவதும் என்று உள்ளதே அதன் தன்மை என்றும் அறியாமல், அவற்றுக்கு அந்த நிலைகள், பகவானைப் பிரிந்த துன்பத்தால் வந்தவை என்று எண்ணியபடி, அறிவற்ற அவற்றைத் தன்னைப் போன்றே துக்கத்துடன் நிற்பவையாகக் கொண்டு, திருவாய்மொழி (2-1-7) - எம்மாற்றாமை சொல்லியழுவோமை - என்பதற்கு ஏற்ப, தான் அவற்றைக் கட்டிக்கொண்டு கிடந்து கதறும்படி. (பெரும் காதலுக்கு பத்திமை) - திருவாய்மொழி (7-3-8) - அலர் தூற்றிற்றது முதலாக் கொண்டவென் காதல் - என்றும், திருவாய்மொழி (4-4-10) – மயல் பெருங்காதல் – என்றும் கூறுவதற்கு ஏற்ப, மற்றவர்கள் கூறும் பழிச்சொற்கள் என்பதே எரு இட்டது போன்று பல கிளைகளாக வளர்ந்து நிற்கும்படியாக, செய்யக்கூடியது மற்றும் செய்யக்கூடாதது என்பது அறியாமல் அறிவுக்குத் தடுமாற்றம் உணடாக்குவதான எல்லையற்ற பக்திக்கு. (நூல் வரம்பு இல்லையே) - ந சாஸ்த்ரம் ந ஏவ ச க்ரம: - பக்திக்கு சாஸ்த்ரம் இல்லை, முறைகளும் இல்லை - என்பதற்கு ஏற்ப, பரமபதத்தில் உள்ளதான அனுபவத்திற்கு உறுப்பாக உள்ள பக்தி போன்று சென்று உள்ளதைக் கண்டிருக்கும். அல்லது திருக்குறுந்தாண்டகம் (10) – பத்திமைக்கன்புடையேன் ஆவதே – என்பதற்கு ஏற்ப நூல் பிடித்தது போன்று செயலாற்ற வரம்பு கட்ட இயலாதபடி உள்ள நிலை. – இதன் மூலம் நிதித்யாஸிதவ்ய: -- த்யானிக்கத்தக்கவன் - என்பதான விதியின் மூலம் உண்டாக்கப்பட்டதாகவும், சேதநர்களால் கைக்கொள்ளப்படுவதாகவும், தகுந்த முறைப்படி வெளிப்படுவதாகவும் உள்ள பக்தி போன்று அல்லாமல், அதற்கு நேர்மாறாக கரையை அழித்துக் கொண்டு ஓடுகின்ற வெள்ளம் போன்று செல்லும் இந்த பக்தியானது சாஸ்த்ர விதிகளின் கீழ் அடங்காது என்று கருத்து. ஆக சூர்ணை (118) - ஞானத்தில் தம் பேச்சு - என்று தொடங்கி, இந்தச் சூர்ணை முடிய கீழே உள்ள பலவும் கூறப்பட்டன: ஞானம் முதிர்ந்துள்ள நிலையில் நம்மாழ்வாராக நின்றும், ப்ரேமம் முதிர்ந்த நிலையில் பெண் தன்மை கொண்டும் பேசுவார் பெண் தன்மை என்பது ஆத்மாவுக்கு வந்து சேர்ந்தது அல்ல (இயல்பாக இருக்கும் ஒன்று) என்பதால் இவ்விதம் பேசுவது இவருக்கு இயல்பே ஆகும் அந்தத் தன்மை பொதுவாக இன்றி, ஆறுவிதமான தன்மைகளால் மஹாலக்ஷ்மிக்கு ஒப்பாக உள்ளார். மற்ற பிராட்டிமார்கள் மற்றும் ஸர்வேச்வரனால் கைக்கெள்ளப்பட்டவர்கள் என்று எல்லாருடனும்ம் ஒப்புமை உள்ளவர். அனைத்துவிதங்களிலும் பெரியபிராட்டியாருடன் ஒப்புமை கூறும்படி உள்ளவர். பகவானை விட்டு அகலாதவர்களாகவும், அவனுடன் நெருக்கமாக உள்ளவர்களாகவும் உள்ள லக்ஷ்மணன், தசரதன் ஆகியோருடைய தன்மைகளும் இவருக்கு உள்ளது. அவர்களைக் காட்டிலும் இவர் வேறுபட்டவர் பிராட்டிமார்கள், ஆதிசேஷன் போன்றவர்ளை “தான்” என்றே எண்ணியபடி இருப்பார். இப்படிப்பட்ட தன்மைகளுக்குக் காரணமாக உள்ள இவருடைய பெண் தன்மையின் செய்கைகள் மற்றும் கைங்கர்யங்களில் உள்ள ஈடுபாடு போன்றவற்றுக்கு த்ரௌபதி மற்றும் கௌஸலை போன்றார்களுடைய தன்மைகளை உதாரணமாகக் கூறுவது பொருந்தாது இத்தகைய தன்மைகளுடன் இவர் செய்யும் செய்கைகளுக்கு ஆதாரமாக உள்ள பக்தியின் வகைகள்