Acharya Hridayam - இரண்டாம் ப்ரகரணம் (சூர்ணை 118)
இரண்டாம் ப்ரகரணம்
ஜ்ஞாநத்தில் தம் பேச்சு; ப்ரேமத்தில் பெண் பேச்சு.
இப்படி ஈச்வரன் வளர்த்துக் கொண்டு போருகிற ஜ்ஞாந ப்ரேமங்களை யுடையரான இவருடைய ஜ்ஞாநதசையிலும் ப்ரேமதசையிலு முண்டான பேச்சுக்க ளிருக்கும்படி எங்ஙனே யென்ன வருளிச்செய்கிறார் மேல் (ஜ்ஞாநத்திலித்யாதி).
– இவ்விதம் ஸர்வேச்வரனால் இவருக்கு வளர்க்கப்படுகின்ற ஞானம் மற்றும் பக்தி ஆகிய நிலைகளில் உள்ள இவருடைய பேச்சுக்கள் எவ்விதம் இருக்கும் என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.
– அதாவது, ஜ்ஞாநதசையில் தாமான தன்மையில் நின்று பேசுவர்; ப்ரேம தசையில் அவஸ்தாந்தராபந்நராய்ப் பெண்பேச்சாகப் பேசுவரென்கை.
– (ஜ்ஞானத்தில் தம் பேச்சு) - ஞானம் உள்ள நிலையில், தான் தன்னுடைய நிலையில் நின்றவராகப் பேசுவார். (ப்ரேமத்தில் பெண் பேச்சு) – ப்ரேமை நிலையில் ஒரு பெண் பேசுகின்ற பேச்சுக்களை [நாயகி பாவத்தில்] பேசுவார்.