Acharya Hridayam - இரண்டாம் ப்ரகரணம் (சூர்ணை 100)
இரண்டாம் ப்ரகரணம்
ஸ்வீக்ருத ஸித்த ஸாதநர் இத்தை ஸாத்யமாக இரக்க ப்ராப்திக்கு முன்னே ஸித்திக்கும்.
இப்படி உபாஸநரூபமாய் (உபாயமுமாயும்) இருந்துள்ளவிது போலன்றிக்கே உபேயபூத கைங்கர்யோபகரணமாக, ப்ரபந்நர் பகவான் பக்கல் அபேக்ஷித்துப் பெறும் பக்தி விஷயத்தை ப்ரதிபாதிக்கிறார் (ஸ்வீக்ருதேத்யாதியால்).
இப்படியாக உபாஸன வடிவில் உள்ள (அல்லது சாதனபக்தி) பக்தி போன்று அல்லாமல், பலனாக உள்ள கைங்கர்யம் ஏற்படுவதற்குச் சாதனமாகவும், ப்ரபந்நர்கள் ஸர்வேச்வரனிடம் வேண்டி நின்று பெற்றுக் கொள்வதும் ஆகிய ஸாத்ய பக்தியைக் கூறுகிறார் (ஸாத்ய பக்தி - மோக்ஷத்தை சாதித்துக் கொள்ள உதவும் பக்தி).
– அதாவது “த்வத்பாத மூலம் சரணம் ப்ரபத்யே” என்றும், “த்வத் பாதாரவிந்த யுகளம் சரணமஹம் ப்ரபத்யே” என்றும் சொல்லுகிறபடியே ஸ்வீகரிக்கப்பட்ட சித்த ஸாதநத்தையுடையவர்கள், இந்த பக்தியை போஜநத்துக்கு க்ஷுத்துப் போலே கைங்கர்யத்துக்கு உபகரணமாகையாலே ப்ராப்யமான கைங்கர்யத்தோபாதி இதுவும் நமக்கு ப்ராப்யமென்று புத்தி பண்ணி, “பகவந் பக்திமபி ப்ரயச்ச மே” என்றும், “ஸ்தாந த்ரயோதித பரபக்தி யுக்தம் மாம் குருஷ்வ, பரபக்தி பரஜ்ஞாந பரமபக்த்யேக ஸ்வபாவம் மாம் குருஷ்வ” என்றும் சொல்லுகிறபடியே, பகவான் பக்கலிலே அர்த்திக்க, “இமாம் ப்ரக்ருதிம் ஸ்தூல ஸூக்ஷ்ம ரூபாம் விஸ்ருஜ்ய ததாநீமேவ” இத்யாதியில் சொல்லுகிறபடியே சரீர வியோகஸ மநந்தரம் பகவத் ப்ராப்தி பண்ணுவதற்கு முன்னே ஸித்திக்கு மென்கை.
(ஸ்வீக்ருத ஸித்த ஸாதநர்) – ஸ்தோத்ரரத்னம்(22) – த்வத்பாத மூலம் சரணம் ப்ரபத்யே – உன்னுடைய திருவடிகளில் சரணம் அடைகிறேன் - என்றும், சரணாகதி கத்யம் - த்வத் பாதாரவிந்த யுகளம் சரணமஹம் ப்ரபத்யே - உன்னுடைய தாமரை போன்ற திருவடிகளில் சரணம் அடைகிறேன் - என்றும் கூறுவதற்கு ஏற்ப, தங்களுக்கு மோக்ஷம் என்ற பலனை சாதித்துக் கொடுக்கவல்லதைச் சாதனமாக உள்ளவர்கள். (இத்தை) – இத்தகைய பக்தியை. (ஸாத்யமாக இரக்க) - உணவுக்குப் பசி என்பது எப்படிக் காரணமாக உள்ளதோ அது போன்று, பக்தி என்பது கைங்கர்யத்திற்குக் காரணமாக உள்ளதால் [அல்லது சாதனமாக, உபகரணமாக உள்ளதால்], அடையப்படவேண்டிய இலக்கான கைங்கர்யம் போன்று, இந்தப் பக்தியும் நம்மால் அடையப்படவேண்டிய இலக்கே ஆகும் என்று தீர்மானித்து, ஸ்தோத்ரரத்னம் (54) – பகவந் பக்திமபி ப்ரயச்ச மே - எனக்கு பக்தியை அளிக்கவேண்டும் - என்றும், சரணாகதி கத்யம் – ஸ்தாந த்ரயோதித பரபக்தி யுக்தம் மாம் குருஷ்வ – மூன்று இடங்களில் கூறப்பட்ட பரபக்தி கொண்டவனாக என்னை நீ மாற்றவேண்டும் – என்றும், சரணாகதி கத்யம் - பரபக்தி பரஜ்ஞாந பரமபக்த்யேக ஸ்வபாவம் மாம் குருஷ்வ - பரபக்தி, பரஜ்ஞானம், பரமபக்தி போன்றவற்றைக் கொண்டவனாக நீ மாற்றவேண்டும் - என்றும் கூறுவதற்கு ஏற்ப பகவானிடம் ப்ரார்த்தித்து நிற்கையில். (ப்ராப்திக்கு முன்னே ஸித்திக்கும்) - சரணாகதி கத்யம் – இமாம் ப்ரக்ருதிம் ஸ்தூல ஸூக்ஷ்ம ரூபாம் விஸ்ருஜ்ய ததாநீமேவ – ஸ்தூலமாகவும், ஸூக்ஷ்மமாகவும் உள்ள இந்தச் சரீரத்தை விட்டுவிட்டு அந்த நேரத்திலேயே – என்று கூறுவதற்கு ஏற்ப, சரீரத்தை விட்டு ஸர்வேச்வரனை அடையும் முன்பாகக் கைகூடும்.