Acharya Hridayam - இரண்டாம் ப்ரகரணம் (சூர்ணை 97)
இரண்டாம் ப்ரகரணம்
அதாவது மயர்வற மதிநல மருளுகை.
– தன்னாக்குகையாவ தென்னென்ன வருளிச்செய்கிறார் (அதாவதித்யாதி).
கடந்த சூர்ணையில் “தன்னாக்க” என்றால் என்ன என்பதற்கு விடை அருளிச் செய்கிறார்.
– அதென்று, தன்னாக்கவென்றத்தைப் பராமர்சிக்கிறது. “மயர்வற மதிநலம் அருளுகை”யாவது – அஜ்ஞாநத்தை ஸவாஸநமாகப் போக்கி பக்தி ரூபாபந்ந ஜ்ஞாநத்தைக் கொடுக்கை.
– சூர்ணையில் உள்ள “அதாவது” என்பதில் உள்ள “அது” என்பது கடந்த சூர்ணையில் உள்ள “தன்னாக்க” என்பதைக் குறிக்கிறது. திருவாய்மொழி (1-1-1) – மயர்வற மதிநலம் அருளி – என்றால், “அறிவற்ற தன்மையை அடியுடன் நீக்கி, பக்தியின் ரூபத்துடன் கூடிய ஞானத்தை அளித்தல்” என்பதாகும்.