Acharya Hridayam - முதல் ப்ரகரணம் (சூர்ணை 65)
முதல் ப்ரகரணம்
பாஷ்யகாரர் இதுகொண்டு ஸூத்ர வாக்கியங்களொருங்கவிடுவர்.
இப்படி இதுகொண்டு சாஸ்த்ரார்த்தங்கள் நிர்ணயித்தவ ராரென்னும் அபேக்ஷையிலே அருளிச்செய்கிறார் (பாஷ்யகாரரித்யாதி).
இப்படியாக உள்ள திருவாய்மொழியின் துணை கொண்டு சாஸ்த்ரங்களின் ஆழ்பொருளை உறுதிபட உரைத்தவர் யார் என்று கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.
– அதாவது, பாஷ்யகாரர் ஸ்ரீபாஷ்யம் பண்ணியருளும்போது ஸூத்ரவாக்யங்களில் ஸந்திக்தங்களான அர்த்தங்களெல்லாம் இப்ப்ரபந்தத்தின் ஸூக்திகளைக் கொண்டு நிர்ணயித்து ஒருங்கவிட்டருளுவ ரென்கை.
எம்பெருமானார் ஸ்ரீபாஷ்யம் அருளிச்செய்தபோது ப்ரஹ்மஸூத்ர வாக்கியங்களில் ஏற்படும் ஐயங்களை இந்த ப்ரபந்தத்தின் துணை கொண்டு தெளிந்து, உறுதிபட உரைத்தார் என்று கருத்து.