Acharya Hridayam - முதல் ப்ரகரணம் (சூர்ணை 44)
முதல் ப்ரகரணம்
ஸகலவித்யாதிக வேதம்போலே இதுவும் திவ்யப்ரபந்த ப்ரதாநம்.
வித்யாந்தரங்களில் வேதத்துக்குண்டான ஆதிக்யம் இதுக்குமுண்டோ வென்னச் சொல்லுகிறது - (ஸகலேத்யாதி).
வடமொழி வேதங்களுக்கு உபகாரங்களாக உள்ள அங்கங்களைக் காட்டிலும் அந்த வேதங்கள் முதன்மையாக உள்ளன; இது போன்று மற்ற ப்ரபந்தங்களைக் காட்டிலும் நம்மாழ்வாருடைய ப்ரபந்தங்கள் முதன்மையாக உள்ளனவோ என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.
– அதாவது, “அங்காதி வேதாச் சத்வாரோ மீமாம்சா ந்யாய விஸ்தர: புராணம் தர்மசாஸ்த்ரஞ்ச வித்யா ஹ்யேதாச் சதுர்தச:” என்று ஸஹபடிதமாயிருக்கச் செய்தே ஸ்வாங்கோபாங்கங்களான ஸகல திவ்யப்ரபந்தங்களிலும் ஸ்வவைபவத்தாலே இதுவும் மேலாயிருக்குமென்கை.
– அங்காதி வேதாச் சத்வாரோ மீமாம்சா ந்யாய விஸ்தர: புராணம் தர்மசாஸ்த்ரஞ்ச வித்யா ஹ்யேதாச் சதுர்தச: – ஆறு அங்கங்கள், நான்கு வேதங்கள் மீமாம்ஸை, ந்யாயம், புராணம், தர்மசாஸ்த்ரம் என்று இவை பதினான்கு கலைகள் - என்பதில் கூறப்பட்டது போன்று, வேதங்களானவை தங்களுடைய அங்கங்கள் மற்றும் உப அங்கங்களின் வரிசையில் சமமாகவே வைத்துக் கூறப்பட்டிருந்தாலும், தங்களுடைய வைபவம் காரணமாக அவை அந்த அங்கங்களைக் காட்டிலும் உயர்ந்ததாகவே கொள்ளப்படுகின்றன. இதே போன்று நம்மாழ்வார் அருளிச்செய்த ப்ரபந்தங்கள் நான்கும் திவ்யப்ரபந்தங்கள் எண்ணிக்கையில் ஒன்றாக வைத்துக் கூறப்பட்டாலும், தங்களுடைய வைபவம் காரணமாக மற்ற ப்ரபந்தங்களைக் காட்டிலும் மேலானதாகவே உள்ளன என்று கருத்து.