Acharya Hridayam - முதல் ப்ரகரணம் (சூர்ணை 42)

முதல் ப்ரகரணம்

வடமொழி மறையென்றது தென்மொழி மறையை நினைத்திறே.

ஆனால், அந்த பாஷை அநாதியாகிறது; திருவாய்மொழிக்கு வேத தத்வ ப்ரகாசமான வசநமுண்டோ வென்னச் சொல்லுகிறது - (வடமொழியித்யாதி).

சரி, தமிழ்மொழி எல்லையற்ற காலமாகவே இருந்து வருகிறது என்று ஆகட்டும். ஆனால் திருவாய்மொழியை “தமிழ்வேதம்” என்று கூறுவதற்கு ப்ரமாணம் உள்ளதா என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.

– அதாவது, “மறை” என்று கேவல வேதவாசி சப்தத்தாலே சொல்லவமைந்திருக்க, “வடமொழிமறை” என்று ஸம்ஸ்க்ருத வேதமென்றது – த்ராவிட வேதமுமுண்டென்று நினைத்திறே யென்கை. ப்ரதிகோடியில்லாதபோது இப்படி விசேஷிக்க வேண்டியதில்லையிறே யென்று கருத்து.

பொதுவாக வேதத்தைக் குறிக்கும்போது “மறை” என்ற சொல் பயன்படுத்தப்படும். திருவாய்மொழி (8-9-8) - வடமொழி மறை - என்று உரைத்தது காண்க. ஆக இங்கு “வடமொழி வேதம்” என்று உரைப்பதன் மூலம், “தமிழ் வேதம்” என்று வேறு ஒன்று உள்ளது என்பது தெளிவாகிறது அல்லவோ? வேறு ஒரு பொருள் இல்லாதபோது இவ்விதம் அடைமொழியாக ஒரு சொல்லுக்குக் கூற வேண்டிய அவசியம் இல்லை அல்லவோ?