Acharya Hridayam - முதல் ப்ரகரணம் (சூர்ணை 30)
முதல் ப்ரகரணம்
இவற்றாலே ஸாதாரண மஸாதாரண மென்னும்.
– இவ்வோ நிலைகளை விஷயமாக வுடைத்தாகையாலே கர்ம கைங்கர்யங்கள் இப்படி சொல்லப்பட்டன என்கிறார் - (இவற்றாலே யித்யாதி).
– அந்தர்யாமியாக நிற்கும் ஸர்வேச்வரனை இலக்காகக் கொண்டது கர்மம் என்றும், அர்ச்சையாக நிற்கும் ஸர்வேச்வரனை இலக்காகக் கொண்டது கைங்கர்யம் என்றும் உள்ளதால், கர்மம் மற்றும் கைங்கர்யங்கள் குறித்து இவ்விதம் கடந்த சூர்ணையில் உரைக்கப்பட்டன என்கிறார்.
– அதாவது, இப்படி தேவதாந்தர்யாமியையும் அர்ச்சாவதாரத்தையும் விஷயமாகவுடைய இவ்வாகாரங்களாலே ஸாதாரண விக்ரஹ விசிஷ்டனை விஷயமாக வுடைய கர்மத்தை ஸாதாரணமென்றும், அஸாதாரண விக்ரஹ விசிஷ்டனை விஷயமாக வுடைய கைங்கர்யத்தை அஸாதாரணமென்றும் சொல்லுமென்கை.
– இவ்விதம் அனைத்து தெய்வங்களுக்கும் அந்தர்யாமியாக உள்ள நிலையையும், அர்ச்சையாக உள்ள நிலையையும் விஷயமாகக் கொண்டதான கர்மம் மற்றும் கைங்கர்யம் என்பவை - நான்முகன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு அந்தர்யாமியாக நிற்பது கொண்டு மிகவும் பெரிய சிறப்பு அற்ற நிலை என்பதால், அந்தர்யாமியாக உள்ள ஸர்வேச்வரனைக் குறித்து இயற்றப்படும் கர்மங்களும் சிறப்பு ஏதும் இல்லாதது என்றும்; திவ்யமங்களமான திருமேனியாக அர்ச்சையுடன் கூடிய நிலை என்பதால், அர்ச்சையாக நிற்கும் ஸர்வேச்வரனைக் குறித்துச் செய்யப்படும் கைங்கர்யங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை என்றும் கருத்து.