Acharya Hridayam - முதல் ப்ரகரணம் (சூர்ணை 28)
முதல் ப்ரகரணம்
மண்டினாரும் மற்றையாரு மாச்ரயம்.
இவற்றுக்கு ஆச்ரயமாரென்னச் சொல்லுகிறது - (மண்டினாருமித்யாதி).
– கர்மம் மற்றும் கைங்கர்யம் ஆகிய இரண்டும் செய்வதற்கு ஏற்றவர்கள் யார் என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.
– அதாவது, “கண்டியூரரங்கம் மெய்யம் கச்சிபேர் மல்லையென்று மண்டினார்” என்று உகந்தருளின நிலங்களிலே அத்யபிநிவிஷ்டரா யிருக்கிற ப்ரபன்னர் கைங்கர்யத்துக்கு ஆச்ரயம். “விளக்கின் விதியில் காண்பார்” என்று கீழிற்பாட்டில் சொன்ன மற்றையாரான உபாஸகர் கர்மத்துக்கு ஆச்ரயமென்கை. இத்தால் கர்ம கர்த்தாக்களையும் கைங்கர்ய கர்த்தாக்களையும் சொல்லிற்றாய்த்து.
– திருக்குறுந்தாண்டகம் (19) - கண்டியூரரங்கம் மெய்யம் கச்சிபேர் மல்லையென்று மண்டினார் - என்பதற்கு ஏற்ப ஸர்வேச்வரன் மிகவும் விருப்பத்துடன் வசிக்கும் திவ்யதேசங்களில் ஆழ்ந்த பற்றுதல் வைத்துள்ள ப்ரபன்னர்களே கைங்கர்யத்திற்கு ஏற்றவர்கள் ஆவர். திருக்குறுந்தாண்டகம் (18) - விளக்கின் விதியில் காண்பார் - என்ற பாசுரத்தில் கூறப்பட்ட மற்ற உபாஸகர்கள் அனைவரும் கர்மத்திற்கு ஏற்றவர்கள் ஆவர். இதன் மூலம் கைங்கர்யம் மற்றும் கர்மம் ஆகியவற்றுக்குத் தகுதியானவர்களை உரைத்தார்.