Acharya Hridayam - முதல் ப்ரகரணம் (சூர்ணை 27)
முதல் ப்ரகரணம்
இவற்றுக்கு விதிராகங்கள் ப்ரேரகங்கள்.
இவையிரண்டுக்கும் ப்ரேரங்கள் எவையென்னச் சொல்லுகிறது – (இவற்றுக்கித்யாதி).
இப்படியாக உள்ள கர்மம் மற்றும் கைங்கர்யம் ஆகிய இரண்டையும் செய்யத் தூண்டுவது எது என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.
– அதாவது “யஜேத, ஜுஹுயாத்” இத்யாதியான சாஸ்த்ரவிதி கர்மத்துக்கு ப்ரேரகம். அசேஷ சேஷதைகரதியாகிற ராகம் கைங்கர்யத்துக்கு ப்ரேரகமென்கை. “பகவதநுபவ ஜநித ப்ரீதிகாரித” மிறே கைங்கர்யம். “உகந்து பணி செய்து” என்னக் கடவதிறே.
கர்மம் செய்யத் தூண்டுவது, யஜேத - யாகம் செய்யக்கடவன், ஜுஹுயாத் – அவிர்பாகம் இடுவனாக – என்பது போன்ற சாஸ்த்ர விதிகள் ஆகும். கைங்கர்யம் செய்யத் தூண்டுவது, அனைத்துவிதமான கைங்கர்யங்களிலும் ஈடுபடுத்தவல்ல ஆசை ஆகும். சரணாகதி கத்யத்தில் - பகவத் அனுபவ ஜநித ப்ரீதிகாரித - பகவத் அனுபவத்தால் பிறந்த ப்ரீதி – என்பதே கைங்கர்யம் என்று உரைத்தது காண்க. திருவாய்மொழி (10-8-10) - உகந்து பணி செய்து - என்றது காண்க.