Acharya Hridayam - முதல் ப்ரகரணம் (சூர்ணை 3)

முதல் ப்ரகரணம்

த்யாஜ்யோபாதேயங்கள் ஸுகதுக்கங்கள்.

த்யாஜ்யோபாதேயங்கள் தாமெவையென்னச் சொல்லுகிறது (த்யாஜ்யேத்யாதி).

– கைவிடத்தக்கதும், ஏற்கத்தக்கதும் எவை என்ற கேள்விக்கு விடை அருளிச் செய்கிறார்.

– அதாவது, “ஸுகீ பவேயம், து:க்கீ மா பூவம்” என்று ஸர்வர்க்கும் துக்கம் அநிஷ்டமாய் ஸுகமிஷ்டமாகையாலே துக்கம் த்யாஜ்யம், ஸுக முபாதேயம் என்கை.

ஸுகீ பவேயம், து:க்கீ மா பூவம் – சுகம் உள்ளவன் ஆகக்கடவேன், துக்கம் உள்ளவன் ஆகக்கடவேன் அல்லேன் - என்றுள்ள வாக்கியத்தின்படி அனைவருக்கும் துக்கம் என்பது விருப்பம் இல்லாததாகவும், சுகம் என்பது விரும்பப்படுவதாகவும் ஆகிறது. ஆகவே துக்கம் என்பது தள்ளப்படவேண்டிதாய், சுகம் என்பது ஏற்கப்படவேண்டியதாய் உள்ளது.