Acharya Hridayam - தனியன்கள் (Thaniyan 3)

தனியன்கள்

ஆசார்யஹ்ருதயத் தனியன்கள்

மாதவத்தோன் மாறன் மனம் கூறும் மணவாளன் தோதவத்தித் தூய்மறையோரான பெற்றார் நீதியினால் ஆங்கவர் தாள் சேர் பெற்றார் ஆய் மணவாளமுநி பூங்கமலத் தாள்கள் நெஞ்சே போற்று

நம்மாழ்வாருடைய திருவுள்ளத்தை வெளிப்படுத்தும்விதமாக அழகிய மணவாளப்பெருமாள் நாயனார், இந்த நூலை “பெற்றார்” என்னும் பெயர் கொண்ட ஒரு சான்றோருக்கு அளித்தார். அவர் இதனைத் திருநாராயணபுரத்து ஆய்க்கு அளித்தார். அவர் இதனை ஸ்வாமி மணவாளமாமுனிகளுக்கு அளித்தார். அவர்களுடைய திருவடித் தாமரைகளை எனது மனமாகிய நீ போற்றுவாயாக.